மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்திய ராணுவம் ஆதாரங்களோடு வீடியோ வெளியிட்டிருக்கிறது. ஆனால், ஊடகங்கள் இதை எல்லாம் மறைத்து விட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக குக்கி பழங்குடியினருக்கும் மெயிட்டி இனத்தவருக்கும் கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக வெடித்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கட்டுப்படுத்த முடியாமல் நடந்து வருகிறது. இந்த சூழலில், பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து மாநிலத்தில் பதட்டம் நிலவுவதோடு, நாடு முழுவதும் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது. அதேசமயம், மணிப்பூரில் பழங்குடியினத்தவர்தான் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், கலவரத்தை அடக்க ராணுவத்தை ஊருக்குள் விடாமல் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு, சில வீடியோக்களுக்கும் வெளியாகின. அந்த வீடியோவில், கலவரத்தை அடக்க வரும் ராணுவ வீரர்களிடம், தங்களது ஆடைகளை அவிழித்து அரை நிர்மாணமாக நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆகவே, மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது மர்மமாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில்தான், மணிப்பூரில் நடக்கும் நிகழ்வுகளை ஆதாரங்களுடன் வீடியோவாக வெளியிட்டிருக்கிறது நமது ராணுவம். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த உண்மையை மறைத்து விட்டு, ஊடகங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பொய் செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.