மாறன் சகோதரர்களின் பித்தலாட்டம்: குட்டை உடைத்த நெட்டிசன்கள்!

மாறன் சகோதரர்களின் பித்தலாட்டம்: குட்டை உடைத்த நெட்டிசன்கள்!

Share it if you like it

பொய்ச் செய்தியை பரப்புவதில் கில்லாடிகளான மாறன் சகோதரர்கள், தற்போது புதிதாக மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக ஒரு பொய்ச் செய்தியை பரப்பிவிட்டு அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.

பொதுவாகவே, தமிழக ஊடகங்களில் பெரும்பாலானவை பா.ஜ.க.வுக்கு எதிராகவும், இந்து அமைப்புகளுக்கு எதிராகவும், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் பொய்ச் செய்திகளை வெளியிட்டு மக்களை திசை திருப்பிவிடுவதோடு, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கி வருகின்றன. இதில், கே.டி. பிரதரஸ் என்று பத்திரிகை மற்றும் மீடியாக்களால் வர்ணிக்கப்படும் மாறன் சகோதரர்கள் கில்லாடிகள். அவர்களுக்குச் சொந்தமான சன் டி.வி., தினகரன், சன் நியூஸ் சேனல் போன்ற சன் குழுமத்தில் முழுக்க முழுக்க பா.ஜ.க.வுக்கு எதிராகவே செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவராக இருக்கும் கலி பூங்குன்றனின் மருமகன் குணசேகரன், சன் நியூஸ் தொலைக்காட்சியின் ஆசிரியர் பொறுப்பை ஏற்ற பிறகு, பா.ஜ.க.வுக்கு எதிராக பொய்ச் செய்திகளை வெளியிடுவது உச்சத்தில் இருக்கிறது. அந்த வகையில்தான், தற்போது மத்திய அரசுக்கு எதிராக மக்களை திசைதிருப்பி விடும் வகையில், புதிதாக ஒரு பொய் செய்தியை வெளியிட்டு அசிங்கப்பட்டு நிற்கிறது சன் குழுமம்.

அதாவது, பிப்ரவரி 1-ம் தேதி (நேற்று) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், கூட்டுறவு (co operative) சங்கங்களுக்கான கூடுதல் வரியை 12 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்திருந்தார். ஆனால், சன் குழும மீடியாக்களில் பெருநிறுவனங்களுக்கான (corporate) கூடுதல் வரியை குறைப்பதாக செய்தியை திரித்து வெளியிட்டு, மக்களை திசை திருப்பி விட்டார்கள். ஆனால், கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள்தான் என்பதுபோல சற்று நேரத்திலேயே அவர்களது குட்டு வெளிப்பட்டு விட்டது. co operative-க்கும் corporate-க்கும் வித்தியாசம் தெரியாத தத்தி ஊடகம் என்று நெட்டிசன்கள் வெளுத்து வாங்கத் துவங்கி விட்டார்கள். இதனால், மக்கள் மன்றத்தில் அசிங்கப்பட்டு நிற்கிறது சன் குழும ஊடகங்கள்.

அதேபோல, சன் குழுமத்தின் பொய்ச் செய்தியை ஆராயாமலேயே உண்மை என்று நம்பி, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும், பெருநிறுவனங்களுக்கான வரியை குறைத்திருப்பதாக உளறிக் கொட்டினார். இதனால், மாநில நிதியமைச்சரையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Share it if you like it