பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு..!

பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு..!

Share it if you like it

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து இருப்பதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு.

பெண்களின் உடல் நலம், மன நலம், ஊட்டச்சத்து குறைபாடு, இளம் வயதில் மரணம் ஆகியவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், என பல்வேறு தரப்புகளிடம் இருந்து கிடைத்த ஆலோசனை அடிப்படையில் மத்திய அரசு 18 வயதில் இருந்த பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கி இருந்தது.

மத்திய அரசின் இந்த முடிவிற்கு பெற்றோர்கள், இளம் பெண்கள், உட்பட பல்வேறு தரப்புகளிடம் இருந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், கேரளாவை சேர்ந்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்பி அப்துல் வஹாப் மற்றும் இந்திய தேசிய லீக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தடா ஜெ ரஹிம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.


Share it if you like it