அனைத்து மத மாணவிகளும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வலியுறுத்தல்… பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு!

அனைத்து மத மாணவிகளும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வலியுறுத்தல்… பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு!

Share it if you like it

மத்தியப் பிரதேசத்தில் பள்ளிக்குள் மாணவிகள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்று வலியுறுத்திய, பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்த 11 பேர் மீது அதிரடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தாமோ மாவட்டம். இங்கு கங்கா ஜமுனா என்கிற தனியார் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் நிர்வாகிகளில் 9 பேர் இஸ்லாமியர்கள். இருவர் மட்டும் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சூழலில், இப்பள்ளியில் பயிலும் மாணவிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அனைவரும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்று பள்ளி நிர்வாகத் தரப்பில் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

மேலும், மாணவிகள் கையில் அணிந்திருந்த கயிறு மற்றும் நெற்றியில் இட்டிருந்த பொட்டு ஆகியவற்றையும் அகற்றும்படி பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதோடு, இறைவணக்க கூட்டத்தில் இஸ்லாமிய பாடல்களை பாட வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் வேறு மதத்தைச் சேர்ந்த மாணவிகள் 2 பேர், பள்ளியில் தங்களை ஹிஜாப் அணியச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக பெற்றோரிடம் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து, பெற்றோர் சென்று கேட்டதற்கு, பள்ளியின் சீருடையே இதுதான் என்று நிர்வாகத் தரப்பில் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, பெற்றோர் கல்வித்துறைக்கு புகார் செய்தனர். விசாரணையில், ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியது உறுதியானது. இதன் தொடர்ச்சியாக, பள்ளியின் அங்கீகாரத்தை கல்வித்துறை ரத்து செய்தது. மேலும், போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் அல்லாத வேறு மதத்தைச் சேர்ந்த மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய இச்சம்பவம் து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it