நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை: அரசு மருத்தவர்கள் அலட்சியம்!

நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை: அரசு மருத்தவர்கள் அலட்சியம்!

Share it if you like it

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு வயது குழந்தைக்கு தவறான அறுவை சிகிச்சை செய்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்துர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையத்தை சேர்ந்த அஜித்குமார், கார்த்திகா தம்பதியருக்கு கடந்த ஆண்டு 30 – ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு, சரியான நாக்கு வளர்ச்சி இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இதனிடையே, ஒரு வருடம் கழித்து மீண்டும் ஒரு அறுவை சிகிச்சையை குழந்தைக்கு செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பெற்றோருக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர். அதன் அடிப்படையில், கடந்த செவ்வாய் கிழமை குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள, மருத்துவர்கள் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதில் குழந்தையின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்திருப்பதை கண்டு பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர். இதுதொடர்பாக, மருத்துவர்களை அணுகி குழந்தையின் பெற்றோர் கேட்டு இருக்கின்றனர். தவறு நடந்து இருப்பதை மருத்துவர்கள் ஒப்புக் கொண்டனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மதுரை அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து, சைல்டு லைன் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனை போல மதுரை ராஜாஜி அரசு மருத்துவர்களும் நடந்து கொண்ட விதம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை அரசு மருத்துவமனை, அறுவை சிகிச்சை, ஆண் குழந்தை, Surgery, Male child, Madurai Government Hospital,

Share it if you like it