பா.ஜ.க. பொதுக்கூட்டம்… கொட்டிய மழை… நனைந்த தொண்டர்கள்… அண்ணாமலையின் அதிரடி முடிவு..!

பா.ஜ.க. பொதுக்கூட்டம்… கொட்டிய மழை… நனைந்த தொண்டர்கள்… அண்ணாமலையின் அதிரடி முடிவு..!

Share it if you like it

பா.ஜ.க. பொதுக்கூட்டத்தின்போது திடீரென மழை பெய்ததால், தொண்டர்கள் நனைந்து கொண்டு பேச்சை கேட்டனர். இதைக் கண்டு, கொட்டும் மழையில் தானும் நனைந்து கொண்டே அண்ணாமலை பேசியது தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். “மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலமாக பாரத பிரதமர் இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். டெல்டாக்காரன் என்று கூறும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் ஒரு மூட்டை நெல்லுக்கு 80 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை கமிஷன் பெறப்படுகிறது.

பாட்னாவில் நடந்த கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் பின் வாசல் வழியாக ஓடிச் சென்றவர் ஸ்டாலின். பின்வாசல் வழியாக செல்வதும், திருட்டு ரயிலில் ஏறி வருவதும் அவருக்கு புதிது அல்ல. சாதாரண மக்கள் சம்பாதிப்பதை தனது குடும்பத்தாரிடம் தருவார்கள். ஆனால், செந்தில்பாலாஜி தான் சம்பாதிப்பதை ஸ்டாலின் குடும்பத்தினருக்கு தருவார். இதுதான் சாதாரண மக்களுக்கும், செந்தில்பாலாஜிக்கும் உள்ள வித்தியாசம். நரேந்திர மோடியை 3-வது முறையாக ஆட்சியில் அமர்த்துவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய தி.மு.க. ஆட்சியை அகற்றுவதும் முக்கியமான கடமை” என்றார்.

அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென மழை பெய்யத் தொடங்கியது. உடனே, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொண்டர்களும், பொதுமக்களும் நாற்காலிகளை குடைபோல தலையில் கவிழ்த்துக்கொண்டு நின்று பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பொதுக்கூட்ட மேடையில் இருந்து கீழே இறங்கி கொட்டும் மழையில் நனைந்தபடியே மக்களுக்கு மத்தியில் நின்றபடி பேசினார். இதைப் பார்த்த தொண்டர்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்தனர். இப்படியொரு தலைவர் எந்தக் கட்சித் தொண்டர்களுக்குக் கிடைப்பார் என்று சொல்லி பெருமைப்பட்டனர்.


Share it if you like it