பூம்புகாரில் 1,000 மீனவர்கள் பா.ஜ.க.வில் ஐக்கியம்!

பூம்புகாரில் 1,000 மீனவர்கள் பா.ஜ.க.வில் ஐக்கியம்!

Share it if you like it

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுமார் 1,000 பேர் பா.ஜக.வில் இணைந்தனர்.

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான இளைஞர்களும் மாற்றுக் கட்சியினரும் பா.ஜ.க.வில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் நடந்த நிகழ்ச்சியில் 1,000-க்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்கள். சீர்காழி தாலுகாவில் அமைந்திருக்கிறது பூம்புகார் மீனவ கிராமம். இங்கு மீனவர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள, இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான அகோரம் தலைமை வகித்தார். முன்னாள் கிராம பொறுப்பாளர்கள் தட்சிணாமுர்த்தி, கலியபெருமாள், பிச்சைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. முன்னாள் ஒன்றியத் தலைவர் முருகையன் வரவேற்றார்.

கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்டத் தலைவர் அகோரம் பொன்னாடை அணிவித்து பேசியபோது, பாரத பிரதமர் நரேந்திரமோடி மீனவர்களின் நலனின் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். பூம்புகார் மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிய விரைவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், முருகன் உள்ளிட்டோர் பூம்புகாருக்கு வருகை தர உள்ளனர். 75-வது சுதந்திர தினத்தை வீடுகள்தோறும் தேசியக் கொடிகள் ஏற்ற கொண்டாட வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி, பொருளாளர் மணிசெல்வம் உள்ளிட்;ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய பா.ஜ.க. தலைவர் விக்னேஷ் நன்றி கூறினார்.


Share it if you like it