மோடியை புகழ்ந்து தள்ளிய ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர்!

மோடியை புகழ்ந்து தள்ளிய ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர்!

Share it if you like it

ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா பாரதப் பிரதமர் மோடியை புகழ்ந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மோடியும் அம்பேத்காரும் ஒண்ணு என்று இசைஞானி இளைய ராஜா கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, காந்தியும் மோடியும் சமம் என தி.மு.க எம்.பி பாரிவேந்தர குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, மோடியும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் ஒண்ணு என்று பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு தெரிவித்து இருந்தார். மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நடிகர் பாக்யராஜ் விமர்சனம் செய்தார். இப்படியாக, பாரதப் பிரதமர் மோடிக்கு நாளுக்கு நாள் தமிழகத்தில் ஆதரவு பெருகிய வண்ணம் இருப்பது தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியின் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழ்நிலையில், ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா மாமல்லபுரம் தமிழ்ச் சங்கம் தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பாரதப் பிரதமர் மோடியை புகழ்ந்து இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

மதச்சார்பற்ற இந்திய திருநாட்டின் சிறந்த மூன்று ஆளுமைகள் ஏழ்மை நிலையில் வாழ்க்கைப் பயணத்தை துவங்கி ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்த மூவேந்தர்கள் மாண்புமிகு மக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாம்; மாண்புமிகு இந்திய பிரதமர் திருமிகு நரேந்திர மோடி ; விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அண்ணாச்சி வி ஜி சந்தோஷம்.

இம்மூவரும் வெவ்வேறு துறைகளில் முத்திரை பதித்து புகழின் உச்சம் தொட்டு இவர்கள் மூவரும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றார்கள் எப்படி
இந்துக்களின் மிக முக்கிய புனித ஸ்தலமான ராமேஸ்வரம் தீவில் பிறந்து படிக்க பள்ளிக்கு செல்லும் முன் வீடு வீடாக சென்று பத்திரிகைகள் போட்டுவிட்டு படித்து முன்னேறி தன்னுடைய அசாத்திய திறமையால் 1998-ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு பரிசோதனை நடத்தி அணு ஆயுத வல்லரசு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று பிரகடனப்படுத்திய அணு விஞ்ஞானியாக இந்தியத் திருநாட்டின் மாண்புமிகு மக்கள் ஜனாதிபதியாக இருந்தவர்அப்துல் கலாம்.

அதேபோன்றுதான் கால்சட்டை பருவத்தில் தேனீர் வியாபாரம் செய்து தன் அயராத உழைப்பின் காரணமாக படிப்படியாக அரசியலில் உயர்ந்து தேசபிதா மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தின் மாண்புமிகு முதலமைச்சராக பின்பு மாண்புமிகு இந்திய பிரதமராக உயர்ந்திருக்கும் திரு நரேந்திர மோடி அவர்களின் திருக்கரத்தால் தேனீர் கடையில் பணியாற்ற செல்லும் முன் சைக்கிளில் வீடு விடாக தினத்தந்தி நாளிதழில் போட்டு இன்று சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக திகழும் கோல்டன் பீச் ரிசார்ட் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவின் தலைவராக உழைப்பால் உயர்ந்தவர் பெருந்தமிழன் வி ஜி சந்தோஷம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.வில் வாரிசு அரசியல் இருப்பதாக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரிடம் கோபம் கொண்டு 1993- ஆம் ஆண்டு வைகோ உட்பட சிலர் அக்கட்சியை விட்டு வெளியேறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். இதையடுத்து, தி.மு.க.வின் குடும்ப அரசியலை பல மேடைகளில் வைகோ மிக கடுமையாக விமர்சிக்க தொடங்கியதை தமிழகமே நன்கு அறியும். அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சியை போல தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் ம.தி.மு.க.வை வைகோ அடகு வைத்து விட்டார் என அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் கடும் விமர்சனம் செய்து வரும் நிலையில், ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா பாரதப் பிரதமர் மோடியை புகழ்ந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

/https://www.facebook.com/profile.php?id=100009928066994

blank

Share it if you like it