தி.மு.க.வால் துரத்தி அடிக்கப்பட்டேன்; வைகோ குற்றச்சாட்டு!

தி.மு.க.வால் துரத்தி அடிக்கப்பட்டேன்; வைகோ குற்றச்சாட்டு!

Share it if you like it

தி.மு.க.வால் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வைகோ நினைவு கூர்ந்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனராக இருப்பவர் வைகோ. இவர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், என பன்முகத்தன்மை கொண்டவர். தமிழகத்தில், உள்ள மிக மூத்த அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். கடந்த, 1992 – ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என இவர் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டது. இதையடுத்து, அவர் தி.மு.க.வை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டார்.

அதன்பின்னர், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து தொடங்கப்பட்ட கட்சி தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். இவர், மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். அடிக்கடி கூட்டணி மாறுவது, தெளிவான கொள்கை முடிவு எடுக்காத காரணத்தினால் அவரது கட்சி அழிவு பாதையை நோக்கி நகரும் சூழல் ஏற்பட்டது. இதனை, தடுக்கும் விதமாகவும் ம.தி.மு.க.வை மீட்கும் முயற்சியாக வெறும் 6 சீட்டுக்கு ஆசைப்பட்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடம் தனது கட்சியை அடகு வைத்தவர் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. இப்படிப்பட்ட சூழலில், விருதுநகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகோ இவ்வாறு பேசி இருக்கிறார்;

தி.மு.க-வுக்காக நான் 21 ஆண்டுகள் பாடுபட்டேன். ஆனால், விதியின் விளையாட்டால் நான் தி.மு.க.விலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. நான், வெளியேறவில்லை தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டேன் என கூறியிருக்கிறார். இவரின், கருத்து தி.மு.க.வில் பெரும் புயலை கிளப்பி விட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it