PNB வங்கியில் சுமார் 13,000 கோடி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய மெஹுல் சோக்சி ஆன்டிகுவாவில் தலைமறைவாக இருந்தார். மத்திய அரசு இவரை நாடு கடத்த தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செய்து வந்தது.
இதனால் பீதியடைந்த சோக்சி அங்கிருந்து மாயமாகி டொமினிக்கா நகரத்திற்கு தப்பி சென்றுள்ளார் இதையடுத்து சோக்சியை போலீசார் தேடி வந்தனர், அப்போது டொமினிகா நகர உள்ளூர் போலீசாரிடம் காவலில் உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அவரை ஆன்டிகுவா போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சோக்சி இன்னும் 48 மணி நேரங்களுக்குள் தனி விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக மத்திய அரசு டொமினிக்காவுடன் நட்புறவை வளர்த்து வந்தது. அதன் ஒரு பங்காக டொமினிக்காவுக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்திய அரசு வழங்கியது இதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக டொமினிக்காவின் பிரதமர் ரூஸ்வெல்ட் “நான் பைபிளை நம்புபவன் என்றாலும், என் நாட்டின் (தடுப்பு மருந்து) வேண்டுதல்களுக்கு இவ்வளவு விரைவில் பலன் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. நன்றி இந்தியா” என பிரதமர் மோதியை டேக் செய்து ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.