மெக்ஸிகோவில் விவேகானந்தர் சிலை!

மெக்ஸிகோவில் விவேகானந்தர் சிலை!

Share it if you like it

மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் சிலையை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார்.

இந்திய நாடாளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம் பி்ர்லா தலைமயிலான பார்லிமென்ட் குழு, நட்புமுறை பயணமாக லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிகோவுக்கு சென்றிருக்கிறது. அங்குள்ள ஹிடால்கோ மாநிலத்தின் தன்னாட்சி பல்கலைக்கழகத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்தார். லத்தீன் அமெரிக்காவில் நிறுவப்படும் சுவாமி விவேகானந்தரின் முதல் சிலை இதுவாகும். நிகழ்ச்சியில் பேசிய ஓம் பிர்லா, “சுவாமி விவேகானந்தரின் போதனைகளும், ஆளுமையும் இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்தியது.

தற்போது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக விவேகானந்தரின் கொள்கைகளை பின்பற்றுவதாக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். சுவாமி விவேகானந்தர் 1893-ல் சிகாகோவில் ஆற்றிய உரையில், இந்தியப் பண்பாட்டின் சிறப்பியல்புகளை அழகாக வெளிப்படுத்தினார். சுவாமி விவேகானந்தரின் செய்தி, காலம் மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்த ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கானது” என்று ஓம் பிர்லா கூறினார்.

பின்னர், மெக்ஸிகோ நாட்டுத் தலைவர்களை சந்தித்து இரு நாடுகளிடையே பொருளாதாரம், வணிகம் மற்றும் கலாசாரம் குறித்து ஓம் பிர்லா பேசினார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கும் ஓம் பிர்லா, “சுவாமி விவேகானந்தரின் போதனைகள் எல்லை கடந்து செல்லும். இச்சிலை இளைஞர்களுக்கு உத்வேகத்தைத் தோற்றுவிக்கும். நான் இங்கு சிலையை திறந்து வைப்பதை மிகவும் கௌரவமாக கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it