தி.மு.க.வை கலாய்த்த ராணுவ வீரர்!

தி.மு.க.வை கலாய்த்த ராணுவ வீரர்!

Share it if you like it

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து பட்டியலை வெளியிட வேண்டும். தாங்கள் சுத்தமானவர்கள் என்பதை நாட்டு மக்களிடம் அவர்கள் நிருபிக்க வேண்டும் என ராணுவ வீரர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர்‌ மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர், தற்போது மேகாலயாவில் சி.ஆர்.பி.எஃப். வீரராக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் நடக்கும் தவறுகளையும், தி.மு.க.வின் அடாவடிகளையும், தொடர்ந்து தோலுரித்துக் காட்டி வீடியோ வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டவர்.

இந்த நிலையில், தி.மு.க.வின் சொத்துபட்டியலை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்-14 – ஆம் தேதி வெளியிட்டார். இதனை தொடர்ந்து, பொதுமக்கள் உட்பட பலர் தி.மு.க.வை கேள்வி கேட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான், தி.மு.க.வினர் தங்களது சொத்து பட்டியலை வெளியிட வேண்டும் என குருமூர்த்தி பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it