பொன்முடி மன்னிப்பு கேட்ட லட்சணத்தை பாருங்க!

பொன்முடி மன்னிப்பு கேட்ட லட்சணத்தை பாருங்க!

Share it if you like it

ஓசி பஸ் என்று தமிழக பெண்களை இழிவுப்படுத்திய அமைச்சர் பொன்மொடி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மீண்டும் தெனாவட்டாக பதில் அளித்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சாரக இருப்பவர் பொன்முடி. இவரது, பேச்சுக்கள் கடும் சர்ச்சையாகவும், பேசுப்பொளுகாகவும் மாறிவிடுவது வழக்கம். அந்த வகையில், ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கோவில்கள் இருக்கும் தெருவில் நடக்கவே முடியாது. இன்று அந்த நிலைமை உண்டா? இதுஎல்லாம் எப்படி மாறியது. தந்தை பெரியார் போட்ட பிச்சையால் இதுஎல்லாம் மாறியது என்பதை யாராவது மறுக்க முடியுமா? என சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருந்தார்.

இதனிடையே, சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதி, கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா விளக்கப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையடுத்து, அமைச்சர் இவ்வாறு பேசினார்; உங்களுக்கு எல்லாம் ரூ. 4,000 ஆயிரம் கொடுத்தது யாரு வாய் திறந்து சொல்லுங்க. இப்ப, நீங்க எப்படி? பஸ்ஸில் வருகிறீர்கள். இங்கிருந்து, கோயம்பேடு போனாலும் எங்கே? போனாலும் ஓசீ பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் தமிழக பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசியிருந்தார். அமைச்சரின், கருத்து தமிழக பெண்கள் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உட்பட பலர் அமைச்சரின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதையெல்லாம், தாண்டி ஒருபடி மேலே சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர் பொன்முடியை பரதேசி, பரதேசி என மிக கடுமையாக சாடியிருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் பொன்முடி நேற்றை தினம் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அப்போது, ஓசி பஸ் விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பொறுப்புடன் பதில் அளிக்காமல் மீண்டும் தெனாவட்டாக அமைச்சர் பேசியிருக்கிறார். தனது தவறுக்கு மன்னிப்பு கேட்கும் லட்சணம் இதுதானா என பொன்முடியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it