தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலும் முல்லைப் பெரியாறு ஆற்றுப் பகுதியிலும் உழவுத் தொழில் செய்யும் விவசாயிகள், தங்கள் பகுதியில் போர் அல்லது கிணறு அமைத்து, மின்சார பம்ப்செட் மூலம் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில், அனுமதி இல்லாமல் ஆற்றுநீர் திருடப்படுவதாகக் கூறி முல்லைப் பெரியாறு அணை பகுதி விவசாயிகளின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதி விவசாயிகள் மிகவும் விரக்தி அடைந்துள்ளனர்.
கடந்த ஜூலை 8-ஆம் தேதி, மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேனி மாவட்ட விவசாயிகள் அனுமதி இல்லாமல் தண்ணீரை பயன்படுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். விளைச்சல் இல்லாமல் மன உளைச்சலில் சிரமப்படும் விவசாயிகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக திருடர்கள் என்று நா கூசாமல் கூறுவது கண்டிக்கத்தக்கது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது கண்டன அறிக்கையில் மேற்கூறியவாறு கூறியுள்ளார்.
எதற்கெடுத்தாலும் பா.ஜ.க, மத்திய அரசு, மோடி, மீது மிக கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் திருமா, சீமான், வைகோ, மற்றும் அறிவாலயத்தில் பிஸ்கெட் வாங்கும் போராளிகள். தமிழக விவசாயிகளை திருடர்கள் என்று கூறிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.