செந்தில்பாலாஜி கைது… கரூரில் வேட்டு வைத்து கொண்டாட முயன்றவர்களுக்கு போலீஸ் வேட்டு!

செந்தில்பாலாஜி கைது… கரூரில் வேட்டு வைத்து கொண்டாட முயன்றவர்களுக்கு போலீஸ் வேட்டு!

Share it if you like it

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை வேட்டு வைத்து கொண்டாட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமானோரை மோசடி செய்ததாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில், கடந்த மாதம் 26-ம் தேதி செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமார், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று செந்தில்பாலாஜி வீடு, அவரது தம்பி வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இதன் தொடர்ச்சியாக, செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால், செந்தில்பாலாஜி நெஞ்சுவலிப்பதாகக் கூறவே, அவரை ஓமாந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. இதன் பிறகு, செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

இதனிடையே, ஓமாந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை நேரில் சந்தித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அல்லி, அவரை வரும் 28-ம் தேதி வரை ரிமாண்ட் செய்யுமாறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அவர் போலீஸ் காவலில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இத்தகவலறிந்த மதுரையைச் சேர்ந்த அகில இந்திய சட்ட உரிமைக் கழக மாநில அமைப்புச் செயலாளர் கருவேலம் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் ஜெயக்குமார், சேகர் உள்ளிட்ட 4 பேர்  கரூர் பேருந்து நிலையம் அருகே இன்று பட்டாசு வெடித்து கொண்டாட முயன்றனர். இந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேற்கண்ட 4 பேரும் செந்தில்பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களா என்பது தெரியவில்லை.


Share it if you like it