தாளாத நெஞ்சுவலியிலும், அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டி சர்ட்டை தானே சரி செய்து கொண்டு, அதிகாரிகளை எட்டி எட்டி உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவில் அவரை கைது செய்வதாக அறிவித்தனர். அப்போது, தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக செந்தில்பாலாஜி கூறியதால், ஓமாந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நெஞ்சு வலி ஏற்பட்டதாக செந்தில்பாலாஜி கூறியவுடன், ஆம்புலன்ஸை எதிர்பார்க்காமல் அதிகாரிகள் தங்களது காரிலேயே அவரை தூக்கிப்போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
ஓமாந்தூரார் மருத்துவமனையை வந்தடைந்த பிறகு, உள்ளே தூக்கிச் செல்வதற்காக அதிகாரிகள் செந்தில்பாலாஜியை தூக்க முயன்றார். அப்போது, வலியால் துடிப்பதுபோல நெஞ்சில் இடது கையையும், நெற்றியில் வலது கையையும் வைத்தபடி துடித்துக் கொண்டிருந்த செந்தில்பாலாஜி, திடீரென வயிற்றின் மேற்பகுதிக்கு வந்த தனது டி சர்ட்டை, நெஞ்சிலிருந்த இடது கையை எடுத்து சரி செய்து கொண்டே, இடது காலால் அதிகாரிகளை எட்டி எட்டி உதைத்தார். கைது நடவடிக்கையின்போது செந்தில்பாலாஜியின் ஒவ்வொரு அசைவையும் அதிகாரிகள் வீடியோ எடுத்தனர்.
அந்த வகையில், செந்தில்பாலாஜியின் மேற்படி லீலைகளும் வீடியோவில் பதிவானது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இதைத்தான் நெஞ்சுவலியிலும் அமைச்சர் தனது டி சர்ட்டை தானே சரி செய்து கொண்டு, அதிகாரிகளையும் எட்டி எட்டி உதைக்கிறாரே என்று கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், தமிழக அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை ஏதேனும் வழக்கில் சிக்கிக் கொண்டால் ‘நெஞ்சுவலி’ நாடகமாடுவது வழக்கம் என்பது மக்கள் மத்தியில் நிலவிவரும் கருத்து. அந்த வகையில், நேற்று செந்தில்பாலாஜியின் நெஞ்சுவலி சம்பவமும் அந்த நாடகங்களுள் ஒன்றோ என்கிற மக்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.