அம்மா மினி கிளினிக்கால் மக்களுக்கு பயன் இல்லை அமைச்சர். மா. சுப்பிரமணியன்.
தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு தொடர்ந்து தடை விதிப்பது, பழைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது, அல்லது திட்டத்தின் பெயரை மாற்றுவது என இன்று வரை விடியல் அரசு அராஜக போக்கினை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் பலர் கடும் குற்றச்சாட்டினை ஆளும் கட்சி மீது சுமத்தி வருகின்றனர்.
ஏழை, எளியவர்கள், பிச்சைக்காரர்கள், குடிசைவாசிகள், என பலருக்கு அம்மா உணவகம் வரப்பிரசாதமாகவும் மேலும் பலருக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கி வருகிறது. அம்மா உணவகத்தின் பெயரை கூட மாற்றி கொள்ளுங்கள், அந்த உணவகத்தின் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் தி.மு.க அரசு எடுக்க வேண்டாம் என பா.ஜ.க உட்பட பல எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 2,000 அம்மா கிளினிக்கிற்கு மூடு விழா நடத்த தி.மு.க அரசு முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.