நேற்று (ஜனவரி 28), மாலத்தீவு நாடாளுமன்ற வளாகத்திற்குள் தற்போதைய ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவின் அமைச்சரவையை தீர்மானிப்பதற்கான முக்கிய வாக்கெடுப்பு நடந்தது.
மாலத்தீவின் முற்போக்குக் கட்சி (பிபிஎம்) மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஆளும் கட்சி எம்.பி.க்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற அறைக்குள் நுழைய விடாமல் தடுத்ததை அடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி) பாராளுமன்றத்தில் கணிசமான அதிகாரத்தைப் பெற்றது. ஆளும் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் ஜனாதிபதி முய்ஸுவின் அமைச்சரவையில் சேர ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளனர்.
நியமிக்கப்பட்டுள்ள கேபினட் அமைச்சர்களின் தகுதி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதனால், ஆளும் பிபிஎம் மற்றும் பிபிசியை சேர்ந்த எம்.பி.க்கள், பார்லிமென்ட் நடவடிக்கைகள் மற்றும் சபாநாயகரின் செயல்பாடுகளை சீர்குலைத்து அங்குள்ள மேசைகளின் மீது ஏறி ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து கொண்டு தாக்கி கொண்டனர். இந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் பிரதமர் மோடியின் லட்சத்தீவு புகைப்படத்தை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த மாலத்தீவு அமைச்சர்களை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
https://x.com/sidhant/status/1751559039773974748?s=20