தி.மு.க.வின் மிசா போராட்ட தில்லுமுல்லு… மாரிதாஸ் வீடியோவால் அம்பலம்!

தி.மு.க.வின் மிசா போராட்ட தில்லுமுல்லு… மாரிதாஸ் வீடியோவால் அம்பலம்!

Share it if you like it

எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டபோது இந்திரா காந்தியை தி.மு.க. எதிர்க்கவில்லை. ஸ்டாலின் மிசாவில் கைதானதாக சொல்லப்படுவதே பொய் என்று மாரிதாஸ் வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டாலின் மிசா கைதி என்று தி.மு.க.வினர் பலரும் கூறி வருகிறார்கள். ஆனால், அப்படிச் சொல்பவர்கள் அனைவருமே வெவ்வேறு விதமாகச் சொல்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை. உதாரணமாக, ஸ்டாலினுக்கு திருமணமான சில நாட்களிலேயே மிசாவால் கைது செய்யப்பட்டார் என்றும், கல்லூரி படிக்கும்போது மிசாவில் கைது செய்யப்பட்டார் என்றும், ஸ்டாலின் மிசா கைதியாக இருந்தபோது, உதயநிதி ஸ்டாலினை சிறைக்கு அழைத்துச் சென்று பார்வையிட்டதாகவும், முன்னுக்குப் பின் முரணாக கூறி வருகிறார்கள். இதனால், உண்மையிலேயே ஸ்டாலின் மிசா கைதிதானா என்கிற சந்தேகம் தமிழக மக்களிடையே நிலவி வருகிறது.

இந்த நிலையில்தான், ஸ்டாலின் மிசா கைதியா என்பது தொடர்பாக சமூக ஆர்வலர் மாரிதாஸ் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், மிசா அறிவிக்கப்பட்ட தேதி 25.6.1975. அப்போது, தி.மு.க. இந்திரா காந்தியுடன் கூட்டணியில் இருந்தது. தி.மு..க.வில் யாருமே கைது செய்யப்படவில்லை. ஸ்டாலினுக்கு திருமணமானது 20.8.1975. இத்திருமணத்தை நடத்தி வைத்தவர், பக்ருதீன் அலி அகமது. இவர்தான் எமர்ஜென்ஸியை அறிவித்தவர். எமர்ஜென்ஸியை அறிவித்தவரே, ஸ்டாலின் திருமணத்துக்கு வாழ்த்துரை வழங்கி இருக்கிறார் என்றால், எப்படி ஸ்டாலின் மிசாவில் கைதாகி இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும், 1976 ஜனவரியோடு தமிழக அரசின் ஆட்சி முடிவடைகிறது. பிப்ரவரியில் சட்டமன்றத் தேர்தல் நடத்தியாக வேண்டும். ஆனால், எமர்ஜென்ஸி அமலில் இருந்ததால் தேர்தல் நடத்த முடியாத நிலை. எனவே, சில மாநிலங்களில் ஆட்சியை நீட்டிக்கிறார்கள். பல மாநிலங்களில் ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்ட மாநிலங்கள் தமிழ்நாடு, குஜராத், மேகாலயா. ஜனவரி 31 வரை தனது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக, இந்திரா காந்திக்கு முட்டுக் கொடுத்த வந்தார்கள்.

ஆனால், என்றைக்கு தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்தார்களோ, அப்போதிருந்துதான் எமர்ஜென்ஸி கொண்டு வந்ததற்காக இந்திரா காந்தியை எதிர்க்கிறேன் என்று கிளம்பினார். ஆகவே, கருணாநிதி வகையறா மிசா போராட்டம் நடத்தியதாகக் கூறுவது பச்சைப்பொய் என்று கூறி, தி.மு.க.வின் இத்தனைகால தில்லுமுல்லை தோலுரித்து காட்டி இருக்கிறார்.


Share it if you like it