பாரத பிரதமர் மோடிதான் சிறந்த தலைவர் என்று பிரபல கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் கூறியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீரர்களில் பிரபலமானவர் மிதாலி ராஜ். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1982-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி பிறந்தவர். பிறந்ததுதான் ராஜஸ்தான் என்றாலும், இவரது பூர்வீகம் தமிழ்நாடு. இவரது தந்தையின் பெயர் துரைராஜ், தாய் லீலா. துரைராஜ் இந்திய விமானப்படையில் வாரண்ட் ஆபீசராக இருந்தவர்.
இந்திய கிரிக்கெட் மீது ஏற்பட்ட காதல் காரணமாக, தனது கடின உழைப்பின் மூலம் கிரிக்கெட் உலகில் இடம் பெற்று பல்வேறு சாதனைகளை படைத்தவர். மேலும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். இவர், 1999 முதல் இன்று வரை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார்.
200-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி, அதிக ரன்களை குவித்தவர். இவர் #AskMithali என்னும் ’ஹேஷ் டேக்கில்’ பிரதமேஷ் பாரா என்பவர், நீங்கள் எதிர்பார்க்கும் சிறந்த தலைவர் யார்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, மித்தாலி ராஜ் நம்முடைய மதிப்பிற்குறிய பாரதப் பிரதமர் மோடிதான் என்று தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். மித்தாலி ராஜ் இவ்வாறு கூறியிருப்பது நம் பாரத நாட்டின் மீதும், பாரத பிரதமர் மோடி மீதும் அவர் வைத்திருக்கும் மரியாதையை காட்டுவதாக இருக்கிறது என்று மெய்சிலிர்க்கிறார்கள் தேசபக்தர்கள்.