மசூதிகளுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை! இதாங்க காரணம்?

மசூதிகளுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை! இதாங்க காரணம்?

Share it if you like it

மசூதியில் இருக்கும் ஒலிபெருக்கியை அப்புறப்படுத்த வேண்டும் இல்லை என்றால், மசூதி அருகே அதிக ஒலியுடன் அனுமன் சாலிசா ஒலிக்கும் என நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவின் அதிரடி அரசியலுக்கு சொந்தகாரர் மறைந்த பால் தாக்கரே. அவர் மறைவிற்கு பின் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப கூடியவராக இருப்பவர் ராஜ் தாக்கரே. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்த பொழுது, இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை நம்பி இருந்த கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. மேலும், அப்பாவி மக்களை எதிர்க்கட்சிகள் மோடி அரசுக்கு எதிராக திருப்பி விட்டதை நாடே அறியும். அச்சமயத்தில், நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் கூறியதாவது; என் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பிறநாட்டினர் வெளியேற வேண்டும். இல்லையெனில் (எம்.என்.எஸ் கட்சி) தனது ஸ்டைலில் அவர்களை வெளியேற்றும் என அக்கட்சியினர் போஸ்டர் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

வெளியேறுங்கள் அல்லது வெளியேற்றப்படுவீர்கள்- ராஜ் தாக்கரே

இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில், நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே இவ்வாறு பேசினார். “மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஏன் அதிக ஒலியில் ஒலிக்கப்படுகிறது? இதை தடுத்து நிறுத்தாவிட்டால், மசூதியின் வெளியே அதே அளவில் ஹனுமான் சாலிசா ஒலிக்கும். “நான் எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரானவன் அல்ல, எனது சொந்த மதத்தில் பிரார்த்தனை செய்வதற்கு நான் பெருமைப்படுகிறேன். இஸ்லாமியர்களின் தொழுகைக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால், மசூதியில் ஒலிபெருக்கிகளை அகற்றுவது குறித்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும். நான் இப்போது எச்சரிக்கிறேன். ஒலிபெருக்கிகளை அகற்றவும் இல்லையேல் மசூதியின் முன் ஒலிபெருக்கி வைத்து ஹனுமான் சாலிசா ஒலிக்கும் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it