துருக்கியில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை இந்தியர்களை அந்நாட்டு மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தாக
முதலில் நாட்டுக்குச் சேவை செய்யுங்கள்’ என நம்பிக்கையூட்டி துருக்கிக்கு அனுப்பி வைத்த மனைவியின் செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதாவது 6-ம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் துருக்கி நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்று சர்வதேச வல்லுனர்கள் கூறியிருந்தனர். அந்தவகையில், ஆயிரகணக்கான அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில், துருக்கி நாடே மிகப்பெரிய பேரழிவை சந்தித்தன. இந்த, நிலநடுக்கத்தில் சுமார் 50,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்ததாக சொல்லப்படுகிறது. பலியின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, துருக்கிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என பாரதப் பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி, இந்தியாவை சேர்ந்த மீட்பு குழு துருக்கிக்கு சென்று இருந்தது. இதையடுத்து, தனது பணியை செவ்வணே செய்து விட்டு இந்திய குழு நாடு திரும்பியுள்ளது. அந்த வகையில், மீட்பு குழுவின் சேவையை பாராட்டும் விதமாக அண்மையில் பிரதமர் மோடி அவர்களை சந்தித்தார். அப்போது, மீட்பு பணியில் ஈடுபட்ட பெண், பிரதமர் மோடியிடம் இவ்வாறு கூறினார் ;
எனக்கு அனைத்தையும் விட முதலானவர் அல்லாதான். அதோடு, இன்றைய தேதியில் இரண்டாவதாக நீங்கள் ( இந்தியா ) இருக்கிறீர்கள் என்று கூறியதாக தனக்கு கிடைத்த அனுபவத்தை மீட்பு பணியில் ஈடுபட்ட பெண் பிரதமரிடம் கூறினார்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.