இந்தியாவின் கனவுகளும், அமெரிக்காவின் கனவுகளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது என இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது : மற்ற எந்த நாடுகளையும் விட இந்தியா – அமெரிக்கா இணைந்து அதிக ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நமது இலக்கை மறு வரையறை செய்ய வேண்டிய சரியான தருணம் அமைந்துள்ளது. உலக அமைதிக்காக நாம் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது.
இந்தியக் கனவுகளும் அமெரிக்க க் கனவுகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. இளமையில் தேநீர் விற்றவர் தற்போது பிரதமராக இந்தியாவை சிறப்பாக உலக அளவில் வழி நடத்தி வருகிறார். பிரதமர் அமெரிக்க பயணத்தின் போது, உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான பந்த த்தின் நம்பமுடியாத கொண்டாட்டத்தை நான் பார்த்தேன். பிரதமர் மோடி கூறியது போல், நமது ஒத்துழைப்பின் நோக்கம் முடிவற்றது. இவ்வாறு அவர்.