மோடி, அண்ணாமலை ஸ்டிக்கர்களை ஆட்டோவில் ஒட்டும் ஆட்டோக்காரர்கள் !

மோடி, அண்ணாமலை ஸ்டிக்கர்களை ஆட்டோவில் ஒட்டும் ஆட்டோக்காரர்கள் !

Share it if you like it

நாட்டின் 18-வது லோக்சபா தேர்தல் தேதியை மார்ச் 9-ந் தேதிக்குப் பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிஷா மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

17-வது லோக்சபா பதவி காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து 18-வது லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்தல் நெருங்குவதால் பாஜக மிக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியைத் தேர்வு செய்துள்ள 25 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, மோடி மற்றும் அண்ணாமலை இடம்பெற்றுள்ள ஸ்டிக்கர் மற்றும் சீருடைகளைத் தமிழக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் அவர்கள் வழங்கிய காணொளியானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக வினோஜ் பி செல்வம் X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

மாற்றத்தை நோக்கி’ ஆட்டோ ஓட்டுநர்கள்!

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில், மாற்றத்தை விரும்பி மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியைத் தேர்வு செய்துள்ள 25 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, ஸ்டிக்கர் மற்றும் சீருடைகளைத் தமிழக பாஜக சார்பில் வழங்கினேன்.


Share it if you like it