காஷ்மீரில் குறையும் தீவிரவாதம் பாரதப் பிரதமரின் துணிச்சல் மிக்க நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு..!

காஷ்மீரில் குறையும் தீவிரவாதம் பாரதப் பிரதமரின் துணிச்சல் மிக்க நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு..!

Share it if you like it

முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஐம்மு-காஷ்மீரில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தது மட்டுமில்லாமல் அவர்கள் வைத்தது மட்டுமே சட்டம் என்பது போல், பாதுகாப்பு மிக மோசமான நிலையில் இருந்தது என்பது நிதர்சனமான உண்மை. தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல்களால் பல அப்பாவி பொதுமக்கள் உட்பட ராணுவ வீரர்களும் பலி ஆக வேண்டிய அவல நிலை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிலவி வந்தது என்பது உறுதி. .

பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின்பு அவர் எடுத்த பல அதிரடி நடவடிக்கைகள் மூலமாக காஷ்மீர் மக்கள் தற்பொழுது அமைதி காற்றை சுவாசிக்க துவங்கியுள்ளனர் என்பதில் யாருக்கும் மறு கருத்து இருக்க முடியாது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் தாக்குதல் நிகழ்த்தும் பொழுது மூளை சலவை செய்யப்பட்ட அப்பாவி காஷ்மீர் இளைஞர்களும், சில நேரங்களில் தீவிரவாதிகளுடன் சேர்த்து கொல்லப்பட வேண்டிய சம்பவம் தொடர் கதையாக இருந்தது. ராணுவ வீரரின் தாக்குதலில் கொல்லப்பட்ட  இளைஞரை தியாகியை போல் பாகிஸ்தான் சித்தரித்து மேலும் பல காஷ்மீர் இளைஞர்களை நமது ராணுவ வீரர்களுக்கு எதிராக தூண்டி விட்டு கொண்டே இருந்தது.

இதனை தடுக்கும் பொருட்டு ( ஆப்ரேஷ்ன மா திட்டம் ) தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இளைஞர்களின் பெற்றோர்களை நேரடியாக சம்பவ இடத்திற்கே கூட்டி வந்துதனது பிள்ளைகளிடம் ராணுவ வீரர்கள் பேச வைத்தன் மூலமாக பலர் திருந்தி வாழும் சூழல் தற்பொழுது ஏற்பட்டு உள்ளது. மேலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருந்தது.

370-வது சட்ட பிரிவை பாரதப் பிரதமர் மோடி காஷ்மீரில் இருந்து நீக்கி 2 வருடம் ஆன பின்பு பல்வேறு மாற்றங்கள் அங்கு நிகழ்ந்து வருவதாக முன்னாள், இன்னாள் மற்றும் ஓய்வு பெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் வரை பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து காஷ்மீர் குறித்த ஆய்வு முடிவு ஒன்று தற்பொழுது வெளியாகி இருப்பது நாட்டு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பினை பெற்று உள்ளது.

இது குறித்த ஆய்வு முடிவு பற்றி பா.ஜ.க மூத்த தலைவர் சுனில் தியோதர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்களின் விவரம்.

 2019_ல்  594

2020- ல்  244

2021-ல்    195

இந்திய ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல்.

2019-ல் 80%

2020 – ல் 62%

2021 – ல் 35


Share it if you like it