பிரதமர் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி மெளனம் காத்த ஸ்டாலின்..!

பிரதமர் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி மெளனம் காத்த ஸ்டாலின்..!

Share it if you like it

பஞ்சாபில் பாரதப் பிரதமருக்கு முறையான பாதுகாப்பு வழங்காத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து.

எதிர்க்கட்சி தலைவரின் டுவிட்டர் பதிவு.

  • மாண்புமிகு பாரதப் பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றுள்ள திரு நரேந்திர மோடி அவர்கள் கடந்த 5.1.2022 அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது அங்கு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது
  • பாரதப்பிரதமர் பதவி என்பது கட்சிக்கு அப்பாற்பட்டது. அந்த பதவிக்கு என்று உலகம் முழுவதும் மரியாதை உள்ளது. மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து இந்தியாவிற்கு உலக அரங்கில் பெருமை சேர்த்து வருகிறார்.
  • இந்த பாதுகாப்பு குளறுபடி தவறுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்குப் பின்னால் யார் உள்ளார்கள் என்பதையும் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
  • பாரதப் பிரதமருக்கு பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட இந்த பாதுகாப்பு குளறுபடியை கடுமையாக கண்டிப்பதுடன், இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் வேறெங்கும் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை, அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. உங்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் நான் செய்ய தயார், நீங்கள் டெல்லிக்கு அழைத்து வாருங்கள் என்று வாக்குறுதி கொடுத்த பிரதமர் நலன் குறித்து கூட கேட்க மனம் இல்லையா? மிஸ்டர் ஸ்டாலின் இது தான் உங்கள் உண்மையான முகமாக? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it