காங்கிரஸ் ஆட்சியில் ரத்த பூமியாக இருந்த ஜம்மு காஷ்மீரை அமைதிப் பூமியாக மாற்றிய மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதிப் பூங்காவாக மாறி வருகிறது. இதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைதான் முக்கிய காரணம். அரை நூற்றாண்டுகளுக்கு மேல் சொல்லொனா துயரத்தை அனுபவித்த மக்கள், இன்று அமைதிக் காற்றை சுவாசிக்கும் நிலையை நோக்கி நகர்வதற்கு மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசே முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.
ஜம்மு காஷ்மீரில் இன்றுவரை பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. காஷ்மீருக்கென்றே தனி ராணுவப்படை பிரிவு, வெகு விரைவில் விமானப்படை பிரிவு என பல அதிரடி திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டு வந்து நிரந்தர அமைதி ஏற்பட மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
பாகிஸ்தான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துதல், தீவிரவாதிகளுக்கு உதவி செய்யும் உள்ளூர் பயங்கரவாதிகளை களையெடுத்தல் என இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பணத்திற்கு ஆசைப்பட்டு தீவிரவாதத்திற்கு ஆதரவுக் கரம் நீட்டும் அப்பாவி மக்களை மனம் திருந்தி வாழ வாய்ப்பளிப்பது உள்ளிட்ட ஏராளமான நடவடிக்கைகளை காஷ்மீர் பகுதியில் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக, பல இளைஞர்கள் தீவிரவாதத்தை விட்டுவிட்டு அமைதிப் பாதைக்கு திரும்புகின்றனர். இச்செயல் நல்ல பலனை அளித்திருப்பதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த சமயத்தில் ‘டீம் பாரத்’ என்னும் ட்விட்டர் பக்கத்தில் ‘புதிய காஷ்மீர்’ என்னும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த மக்கள், பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என்று தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.