உலக தலைவரின் பிறந்த நாள்: தமிழக பா.ஜ.க. வெளியிட்ட காணொளி!

உலக தலைவரின் பிறந்த நாள்: தமிழக பா.ஜ.க. வெளியிட்ட காணொளி!

Share it if you like it

பாரப் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் செய்த சாதனைகளை விளக்கும் விதமாக தமிழக பா.ஜ.க. காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 1950 – ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 – ஆம் தேதி குஜராத் மாநிலம் வாட்நகர் எனும் இடத்தில் தாமோதர்தாஸ் முல்சந் மோடி மற்றும் அவரது மனைவி கீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாக பிறந்தவர் மோடி. எட்டு வயது இருக்கும் போது தம்மை ஆர்.எஸ்.எஸ்-ல் இணைத்து கொண்டார். இதனை தொடர்ந்து, படிப்படியாக தம்மை பட்டை தீட்டி கொண்டார். இதையடுத்து, பல்வேறு பொறுப்புகள் மோடியை தேடி வர ஆரம்பித்தன.

அதன்பின், தனது கவனத்தை அரசியல் பக்கம் திருப்பினார். 1985 -ல் தம்மை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். தனது, அபார திறமையை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து, 2001 – ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி குஜராத் முதல்வர் ஆனார். இதனை தொடர்ந்து, அவரது வாழ்வில் ஏறுமுகம் தான். குஜராத் அரசியல் வரலாற்றில், 2063 நாட்கள் முதல்வராக இருந்த ஒரே நபர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, தேசிய அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். இதையடுத்து, 2014 -ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக மோடி களம் இறக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பா.ஜ.க.விற்காக பிரச்சாரம் செய்தார். அதன் பலனாக, நாட்டின் 14-வது பிரதமராக மோடி பதவி ஏற்றுக் கொண்டார்.

மோடியை பற்றிய மற்றொரு ஆச்சர்யமான தகவல் என்னவெனில், அவர் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆன போது குஜராத் முதல்வரானவர். அதேபோல, முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட போது பிரதமர் ஆனார். 2014- ஆம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க இவரே முழு காரணம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

பிரதமர் மோடியின் அதிரடி அரசியலில் இதனை குறிப்பிட்டு சொல்லலாம்; 2016-ல் ரூபாய் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. நாடு முழுவதும் 2017 – ல் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியது. 2019 – ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு முத்தலாக் முறையை நாட்டை விட்டே ஒழித்து கட்டியது.

2019-ல் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35-ஏ மூலம் வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகளை அதிரடியாக நீக்கியது என இவரது சாதனைகள் ஏராளம்.

இவர், எழுதிய நூல்கள் ; சக்தி பாவ் (2015), சமூக நல்லிணக்கம் (2015), ஜோதி பூனா (2015) ‘சமூக நல்லிணக்கம்’ (2010) குஜராத்தி. 2022, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ. 2 கோடிய 23 லட்சத்து 82 ஆயிரத்து 504 ரூபாயாக இவரது சொத்து மதிப்பு உள்ளது. இதனிடையே, பாரதப் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியாவை கடந்த உலகம் முழுவதும் அவருக்கு வாழ்த்து செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தமிழக பா.ஜ.க. மோடியின் சாதனைகளை விளக்கும் விதமாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் லிங்க் இதோ.

 


Share it if you like it