பாரதப் பிரதமர் மோடி (மன்கி பாத்) மனதின் குரல் நிகழ்ச்சியில் புறநானூறை மேற்கோள் காட்டி பேசி இருப்பதை பலர் வரவேற்று இருக்கின்றனர்.
பாரதப் பிரதமர் மோடி மனதின் குரல் (மன்கீ பாத்) என்னும் நிகழ்ச்சியின் மூலம் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடம் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில், தேசத்திற்கும், சமூகத்திற்கும் தங்களால் இயன்ற சேவைகளை செய்து வரும் நன்மக்களை அடையாளம் கண்டு உலகம் அறிய செய்வதை தனது கொள்கையாக கொண்டவர். மேலும், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, தொன்மை, உள்ளிட்டவற்றை மன்கீ பாத் நிகழ்ச்சியில் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்.
அந்த வகையில், நேற்றைய தினம் மன்கீ பாத்தில் உரை நிகழ்த்தும் போது சிறுதானியங்களின் அவசியம் குறித்தும், அது உடலுக்கு அளிக்கும் நன்மைகள் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், ரத்த கொதிப்பு, சுகர், உள்ளிட்ட பல்வேறு நோய்களை சிறுதானியங்கள் முற்றிலும் குணமாக்குவதாக தெரிவித்து உள்ளார். மேலும், சிறுதானியங்களின் சிறப்புகள் பற்றி தமிழர்களின் தொன்மை நூலானா புறநானூற்றில் இடம் பெற்று இருப்பது குறித்து பிரதமர் மோடி மேற்கோள்காட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.