தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இந்திய அரசு சிறப்பான முறையில் எங்களுக்கு உதவி செய்ததாக மாணவர்கள் பரவசம் அடைந்து பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைனில் போர் நடந்துவரும் சூழலில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, மீட்க மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்பி விட்டனர். எஞ்சியவர்களையும் மீட்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. போர் நடைபெற்று வரும், அண்டை நாடுகளில் தஞ்சமடைந்திருக்கும். மற்ற இந்தியர்களை டெல்லிக்கு அழைத்து வந்து, அங்கிருந்து அவரவர் மாநிலங்களுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மீனாம்பாக்கம் விமானநிலையத்தை வந்தடைகின்றனர்.
போர் உக்கிரமாக நடைபெற்று வரும், இருநாடுகளிடமும் பாரதப் பிரதமர் மோடி பேசியுள்ளார். அதன் விளைவாக, இருநாடுகளும் போரை நிறுத்த முன்வந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு மீட்டு உள்ளது. இந்த பெரும் முயற்சி எடுத்த பாரதப் பிரதமருக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது. இப்படி, பிரதமருக்கு கிடைத்து வரும் நற்பெயரை தனக்கு சாதகமாக, மாற்றிக் கொள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின் தீவிர முயற்சி கொண்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. அந்த வகையில், தமிழகம் திரும்பிய மாணவர்களை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்பொழுது, இந்திய அரசு எங்களுக்கு சிறப்பான முறையில் உதவி செய்ததாக மாணவர்கள் பரவசம் அடைந்து பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.