பிரதமரிடம் சரண் அடைந்த ஸ்டாலின்!

பிரதமரிடம் சரண் அடைந்த ஸ்டாலின்!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் சரண் அடைந்து இருப்பது தமிழக மக்களிடையே மிகுந்த ஆச்சரியத்தையும் கழக கண்மணிகளுக்கு கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மற்றும் தமிழக முதல்வராக இருப்பவர் ஸ்டாலின். இவர், முதல்வராக பதவியேற்ற பின்பு மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கினை கடைப்பிடித்து வருகிறார். ’தலைவன் எவ்வழியோ தொண்டனும்’ அவ்வழியே என்பதற்கு ஏற்ப, தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசுக்கு எதிராகவே இன்று வரை கருத்து தெரிவித்து வருகின்றனர். ரூ. 31,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் விதமாக, அண்மையில் சென்னை வந்தார் பிரதமர் மோடி. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் ‘ஒன்றிய அரசு’ என பலமுறை பிரதமர் முன்னிலையிலேயே பேசி இருந்தார். இதனையே, தி.மு.க.வை சேர்ந்த பலர் இன்று வரை கடைப்பிடித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அண்மையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், தி.மு.க.வை சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவ்விழாவினை புறக்கணித்து தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்து இருந்தார். இச்சம்பவம், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இதுதவிர, பாரதப் பிரதமர் மோடி தமிழகம் வரும் பொழுதெல்லாம் ’கோபேக் மோடி’ என ட்விட்டரில் டிரெண்ட் செய்வதை தி.மு.க. வாடிக்கையாக கொண்டு இருந்தன. இப்படியாக, மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை தி.மு.க. கடைப்பிடித்து வந்தன.

இந்நிலையில், சர்வதேச 44-வது செஸ் போட்டியினை துவக்கி வைக்கும் விதமாக, இரண்டு நாள் பயணமாக நேற்றைய தினம் பாரதப் பிரதமர் மோடி சென்னை வந்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய, மாநில அமைச்சர்கள் பா.ஜ.க மூத்த தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் பல முறை இந்திய அரசு என பிரதமர் முன்னிலையிலேயே கூறி இருந்தார். இதுதான், தற்போது தமிழகம் முழுவதும் பேசுப் பொருளாக மாறி இருக்கிறது.

இதனை தொடர்ந்து, பாரதப் பிரதமர் மோடி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42 – வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, பேசிய முதல்வர் ஸ்டாலின் இந்திய அரசு என சில இடங்களில் மேற்கோள் காட்டி பிரதமர் முன்னிலையில் பேசி இருக்கிறார். இதுநாள் வரை ’ஒன்றிய அரசு’ என பேசி வந்த ஸ்டாலின், திடீர் என பிரதமர் மோடியிடம் சரண் அடைந்தது ஏன்? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்ட அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிக்க முடியாமல் கலந்து கொண்டது தான் ஹைலட் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it