தி.மு.க-வின் மூத்த தலைவரும் மறைந்த க. அன்பழகனின் பேரனுமான அன்புகிரி, பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் வானில் நீண்ட காலம் பயணித்தவர். திராவிட முன்னேற்ற கழகத்தில் நெடும் காலம் பொதுச் செயலாளராக இருந்தவர். கல்வி அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் என பல பொறுப்புகளை அலங்கரித்தவர். தி.மு.க-வின் மூத்த தலைவரும் மறைந்த க. அன்பழகனின் பேரனுமான அன்புகிரி பிரபல இணையதள ஊடகமான கலாட்டாவிற்கு பிப்-3 ம் தேதி அளித்த பேட்டியில். தான் பா.ஜ.கவில் சேர்ந்தது குறித்தும், பா.ஜ.க-வின் வளர்ச்சி குறித்தும் இக்கணாளியில் அவர் பேசியுள்ளார். அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
பா.ஜ.க-வில் சேர்ந்ததற்கு காரணம், நான் ஒரு தேசியவாதி மற்றும் ஆன்மீகவாதி. எனது தாத்தா-வின் மறைவிற்கு பிறகு தி.மு.க-வின் பார்வையே மாறியது. அங்கு, உரிய மரியாதை, அங்கீகாரம் கிடைக்கவில்லை. மோடியின் திட்டம் மாதிரியே, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். அதே தான் கட்சியின் தலைமையில் ஆரம்பித்து அடிமட்ட தொண்டன் வரை. தி.மு.க-வில் உரிய மரியாதை இல்லை, ஆனால், பா.ஜ.க-வில் எனக்கு உரிய மரியாதை கிடைக்கிறது. உழைப்புக்கு ஏற்ற இடமாக பா.ஜ.க உள்ளது. படித்த இளைஞர்கள் பா.ஜ.க-வை தற்பொழுது நன்கு புரிந்து கொண்டு உள்ளனர். பெரியார் மண்ணில் பா.ஜ.க வெல்லும், காவி கொடி பறக்கும். பாரதப் பிரதமர் மோடி மனித நேயமிக்கவர் என்று குறிப்பிட்டுள்ளளர் அக்காணொளியின் லிங்க் இதோ.
/https://www.facebook.com/watch/?extid=CL-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&v=628040035127031