நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி ஓபிசி மக்களுக்கான ’சமூகநீதியை’ நிலைநாட்டி பா.ஜ.க வரலாற்று சாதனை – அஸ்வத்தாமன்..!

நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி ஓபிசி மக்களுக்கான ’சமூகநீதியை’ நிலைநாட்டி பா.ஜ.க வரலாற்று சாதனை – அஸ்வத்தாமன்..!

Share it if you like it

ஓபிசி மக்களுக்கான சமூகநீதியை பெற்று தந்து வரலாற்று சாதனை படைத்து உள்ளது பா.ஜ.க. இது குறித்து நீண்ட அறிக்கை ஒன்றினை அக்கட்சி செய்தி தொடர்பாளரும் மூத்த தலைவருமான அஸ்வத்தாமன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

ஓபிசி மக்களை வஞ்சிப்பதை வாழ்நாள் வாடிக்கையாக வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி , ஓபிசி மக்களுக்கு செய்ய தவறிய, செய்யாமல் வஞ்சித்த பல நன்மைகளை பாஜக செய்து வருகிறது. 2021 ஜீன் 29 ஆம் தேதி மருத்துவ மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் ஓபிசி மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளித்து ஒரு வரலாற்று சாதனையை மோடி ஜி தலைமையிலான பாஜக அரசு செய்தது. இப்போது இதை உச்சநீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி உறுதி செய்து தீர்ப்பு வாங்கியிருக்கிறது பாஜக அரசு.

இந்த மத்திய மருத்துவ தொகுப்பு, ஒதுக்கீடு 1986 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டு பின்பற்றப்பட்டு வந்தாலும், 2007-ல் தான் அபிநாத் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எஸ்சி மற்றும் எஸ்டி இட ஒதுக்கீடு தரப்பட்டது. அப்போது இருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு நினைத்திருந்தால் அப்போதே ஓபிசி மக்களுக்கும் இதில் இட ஒதுக்கீடு அளித்திருக்க முடியும். ஆனால் இதற்கு மேல் எந்த இட ஒதுக்கீடும் தர வேண்டாம் என்று பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது அன்றைய காங்கிரஸ் அரசு.

அதன்பிறகு 2014ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் கூட்டணியிலிருந்து திமுகவும், ஓபிசி இட ஒதுக்கீட்டிற்காக ஒரு சிறு துரும்பை கூட நகர்த்தி வைக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக இருந்த சலோனிகுமார் என்ற வழக்கில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில் ஓபிசி மக்களுக்கு மத்திய மருத்துவ தொகுப்பு இட ஒதுக்கீட்டில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை நாங்கள் தருவோம் என்று உறுதி கூறியது. உச்சநீதிமன்றத்தின் அனுமதியையும் கோரியது.

அதன் பிறகு மிகக் கடுமையான முயற்சிகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டு சென்ற ஆண்டு ஜூன் 29ஆம் தேதி மத்திய மருத்துவ தொகுப்பு இட ஒதுக்கீட்டில் 27% இட ஒதுக்கீட்டை அளித்து வரலாற்று சாதனை செய்தது பாஜக அரசு. இன்று அதுதொடர்பான வழக்கிலும் உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெற்று மருத்துவ மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் ஓபிசி மக்களுக்கான 27% இட ஒதுக்கீடு என்பதை நிலைநிறுத்திக் காட்டி வரலாற்றில் இடம் பெற்றுள்ளது பாஜக அரசு. அதுமட்டுமல்லாது 2018 ஆம் ஆண்டில் ஓபிசி கமிஷன் அதாவது ஓபிசி ஆணையத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்குவதற்கான சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்து ஓபிசி மக்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தது நம்முடைய பாஜக அரசுதான்.

இது, அதாவது ஓபிசி கமிசனுக்கான அரசியலமைப்பு அங்கிகாரம், 1994 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வலியுறுத்திய விஷயமாக இருந்தாலும் வழக்கமாக ஓபிசி மக்களுக்கு வஞ்சத்தை மட்டுமே காட்டும் இந்திரா காங்கிரஸ், இதை செய்யவில்லை. மத்திய மருத்துவ தொகுப்பு ஒதுக்கீட்டில் எப்படி காங்கிரஸ், ஓபிசி மக்களுக்கு துரோகம் இழைத்ததோ அதுபோன்று மண்டல் கமிஷன் விஷயத்திலும் துரோகம் தான் செய்தது என்பதுதான் வரலாற்று உண்மை.

இந்திய அரசியல் வரலாற்றில் ஓபிசி மக்களுக்கான ரிசர்வேஷன் என்பதற்கான பேச்சு முதல் முதலில் 1953 ஆம் ஆண்டு காகா கலேல்கர் கமிட்டி அமைக்கப்பட்டபோது தான் எழுந்தது. இந்தியாவிலிருந்த பிற்பட்ட சாதிகளுடைய பட்டியலை கொடுத்த காகா கலேல்கர் கமிட்டி ,அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அந்த கமிட்டியினுடைய ரிப்போர்ட்டை எந்தவிதமான விசாரணையும் இன்றி குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தது அன்றைய காங்கிரஸ் அரசு.

அதன் பிறகு ஓபிசி மக்களுக்கான ரிசர்வேஷன் என்கிற பேச்சே காங்கிரஸ் அரசுகள் இருந்தவரை எழவில்லை. முதன்முதலில் காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் பாரதிய ஜன சங்கம் அங்கம் வகித்த அரசாங்கம் வந்த போதுதான் ஓபிசி-க்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக மண்டல் கமிஷன் முதல் முதலில் அமைக்கப்பட்டது. அதாவது 1979 ஆம் ஆண்டு மொராஜ் தெசாய் பிரதமராகவும் , வாஜ்பாய் அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், அத்வானி அவர்கள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் இருந்த அந்த அமைச்சரவை தான் மண்டல் கமிஷனை அமைத்தது.

மொராஜ் தேசாய் அரசு விழுந்ததற்கு பிறகு இந்திரா காங்கிரஸ், அடுத்த பத்து ஆண்டுகள் இந்த இந்தியாவை ஆண்டதால் , மண்டல் கமிஷன் தன்னுடைய ரிப்போர்ட்டை 1980ஆம் ஆண்டு தந்து விட்டபோதிலும் அதை அமல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மண்டல் கமிஷன் ரிப்போர்ட் கிடப்பில் போடப்பட்டது.

அதன்பிறகு காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் மீண்டும் அமைந்த போது தான் மண்டல் கமிஷன் மீண்டும் உயிர் பெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற ஜனதா அரசாங்கம் விபி சிங் தலைமையில் அமையப்பெற்றது . அதன்பின்தான் மண்டல் கமிஷன் உடைய ரிப்போர்ட் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விபி சிங் அவர்களால் 1989 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

இந்திரா சகானி என்ற இந்திரா காங்கிரஸின் ஆதரவு பெற்ற நபர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு 1994 ஆம் ஆண்டு வந்தது. வரலாற்று சிறப்புமிக்க அந்த தீர்ப்பில் பொருளாதார சமூக ரீதியாக ஒரு சமுதாயம் பிற்பட்டு இருக்கிறது என்பதை முடிவு செய்கிற ஒரு அம்சமாக சாதியை கருதலாம் என்று கூறப்பட்டது. மேலும் ஓபிசி மக்களுக்கு ஒரு கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் மண்டல் கமிஷன் ரிபோர்ட் நடைமுறைப்படுத்தப்பட்டு ஓபிசி இட ஒதுக்கீடு உண்டானது.
தீர்ப்பு வந்த போது காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்ததால் அந்த தீர்ப்பை முழுமையாக செயல்படுத்தாமல் ஓபிசி கமிஷன் என்பதை ஒரு பல்லில்லாத பாம்பாக, அதாவது அரசியலமைப்பு அங்கீகாரம் இல்லாத பெயரளவிற்கு அமைக்கப்பட்ட ஒரு கமிஷனை அமைத்தது.

அந்த வரலாற்று தவறைத்தான், 2018ல் ஓபிசி கமிஷனுக்கு அரசியல் அங்கீகாரத்தை வழங்குவதற்கான சட்டத் திருத்தத்தை ஏற்று மோடி அவர்கள் சரி செய்தார். இன்று மருத்துவ மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் ஓபிசி மக்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்றி ,அதில் உச்சநீதிமன்ற அறுதியையும் வரலாற்று சாதனையோடு நிமிர்ந்து நிற்கிறது பாஜக அரசு.

இன்றும் அன்றும் என்றும் ஓபிசி மக்களின் உரிமைகளைப் பேணுவதில், சமூக நீதியை நிலைநாட்டுவதில் பாஜக தன்னிகரின்றி தலைநிமிர்ந்து நிற்கிறது. இதில் ஓபிசி மக்களுக்கு துரோகம் அளிப்பதையே வாடிக்கையாகக் கொண்ட காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும், அடுத்தவர்களுடைய உழைப்பிற்கு கொஞ்சமும் கூச்சமில்லாமல் ஸ்டிக்கர் ஒட்டுகிற வேலையை பார்க்கிற திமுகவும் ஸ்டாலினும், இன்னும் சில அடிப்பொடி கட்சிகளும் இந்த வரலாற்று சாதனையில் பெயர் வாங்கிக்கொள்ள துடிப்பதை பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.


Share it if you like it