இலங்கை மக்களுக்கு தக்க சமயத்தில் உதவிய பாரதப் பிரதமர் மோடிக்கு, பிரபல திரைப்பட இயக்குனர் டி.ஆர். ராஜேந்திரன் நன்றி தெரிவித்து பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
சீனாவின் சூழ்ச்சியால் கொரோனாத் தாக்கம் ஒட்டு மொத்த உலகத்தையும் ரத்த கண்ணீர் வடிக்க வைத்தது. இதன் காரணமாக, வல்லரசு நாடுகள் முதல் ஏழை நாடுகள் வரை மிக கடுமையான பாதிப்பினை சந்தித்தன. இதுதவிர, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சியில் சிறிது தேக்கம் ஏற்பட்டது. இருந்த போதிலும், மிக வலுவான தலைவராக பாரதப் பிரதமர் மோடி இருந்த காரணத்தினால், இந்தியா மிகப்பெரிய பாதிப்பினை சந்திக்கவில்லை என்பதே நிதர்சனம். ஆனால், இந்தியாவை சுற்றியுள்ள பல அண்டை நாடுகள் கடும் பாதிப்பினை சந்தித்தன. இதையடுத்து, தனது நாட்டு மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்தது மட்டுமில்லாமல், மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் உணவு பொருட்களை மத்திய அரசு தொடர்ந்து வழங்கியது.
“கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப சீனாவை நம்பிய இலங்கை. தற்சமயம், மிக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி பெரும் இன்னலை சந்தித்து வருகின்றன. நாளுக்கு நாள் இலங்கையில், பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே போவதால், அந்நிய செலவாணி கையிருப்பு வெகுவாக குறைந்து, மக்கள் தினமும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், இலங்கை அரசையும், இலங்கை மக்களையும் பாதுகாக்கும் வண்ணம், மோடி தலைமையிலான அரசு தன்னால் இயன்ற கடன் உதவிகளையும், பொருளுதவிகளையும் செய்து வருகிறது.
இதன் காரணமாக, அந்நாடு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், பாரதப் பிரதமர் மோடி இலங்கைக்கு செய்து வரும் உதவிகளுக்கு பிரபல திரைப்பட இயக்குனர் டி.ஆர். ராஜேந்திரன் தனது நன்றியின் தெரிவித்து பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாக துவங்கியுள்ளது. மத்திய அரசை வெகுவாக பாராட்டி இருக்கும் டி. ராஜேந்திரரை கழக கண்மணிகள் இந்நேரம் சங்கி என முத்திரை குத்தியிருப்பார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டி.ஆர் ராஜேந்திரன் பேசிய காணொளி இதோ.