இந்திய, இஸ்ரேல். தூதரக உறவு குறித்து இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து காணொளி ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.
இஸ்ரேலுக்கும், இந்தியாவுக்கும், இடையிலான தூதரக உறவுகளின் 30-வது ஆண்டினை இன்று நாம் கொண்டாடுகிறோம். ஒரு வலுவான உறவினை நாம் கொண்டாடுகிறோம், நம்முடைய நட்பு ஆழமான நட்பு, எதிர்காலத்திற்கான நம்பிக்கை மற்றும் ஒன்றாக நாம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்வோம். என இந்திய, இஸ்ரேல். தூதரக உறவு குறித்து இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அண்மையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்க சென்று இருந்தார் பிரதமர் மோடி. அதில் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அச்சமயத்தில் இஸ்ரேலின் பிரதமர் நப்தாலி பென்னெட் இந்திய பிரதமரிடம் உரையாற்றி கொண்டு இருந்த சமயத்தில் சுவாரசியமான சம்பவம் ஒன்று அங்கு நிகழ்ந்தது.
எங்கள் நாட்டில் நீங்கள் மிகவும் பிரபலமான மனிதர் என் கட்சியில் நீங்கள் சேர வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் அழைப்பு விடுத்தற்கு தனது நன்றியையும், மகிழ்ச்சியையும், வெளிப்படுத்தி இருந்தார் இந்திய பிரதமர் மோடி.