உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பாரத பிரதமர் மோடி, பட்டியல் சமூகத் தலைவரின் காலை தொட்டு வணங்கிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, மோடி வெறுப்பை பரப்பும் திருமா, இதைப் பார்த்தாவது திருந்த வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் மாறா அன்பும் பற்றும் கொண்டவர் பிரதமர் மோடி. வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் திருக்குறள், பாரதியார் கவிதைகள், ஒளவையார் பொன் மொழிகள் என தமிழன் பெருமையை உலகம் முழுவதும் பறைச்சாற்றி வருகிறார். தவிர, பட்டியல் சமூகம், பழங்குடி சமூகம் என அனைத்து சமூக மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டி, இரவு பகல் பாராமல் அரும்பாடுபட்டு வருகிறார். அந்த வகையில், 75 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனையை தனது ஆட்சி காலத்தில் நிகழ்த்தியுள்ளார் பிரதமர் மோடி.
ஆம், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மத்திய அமைச்சராக்கி இருக்கிறார். இதுவரை எந்தக் கட்சியும் செய்யாததை பா.ஜ.க. செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், நான் செருப்புத் தைக்கும் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் எல்.முருகன் உருக்கமுடன் பிரதமருக்கு நன்றி தெரிவித்து பேசிய காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காணலாம். அதேபோல, பட்டியல் இனத்தைச் சேர்ந்த 12 பேர், மலைவாழ் மக்கள் 8 பேர், ஓ.பி.சி.யில் 28 பேரை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பிரதமர் மோடி.
இப்படி, பட்டியல் சமூக மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்து வரும் பிரதமருக்கு நன்றி தெரிவிக்காமல், வி.சி.க.வைச் சேர்ந்தவர்கள் தரைக்குறைவாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக, அவரை கொலைகாரன் என வன்னியரசும், அக்கட்சியின் தலைவர் திருமாவளனும் மேடைதோறும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான், உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பிரசார மேடையில் இருந்த பட்டியல் சமூகத் தலைவர் ஒருவர், பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கி இருக்கிறார். பதிலுக்கு பிரதமர் மோடியும் அவரது காலைத் தொட்டு வணங்கி இருக்கிறார்.
இதையடுத்து, சமூக நீதி, சுயமரியாதை என்று பேசும் திருமாவளனுக்கு தி.மு.க.வினர் பிளாஸ்டிக் சேர் கொடுத்து அவமரியாதை செய்த சம்பவத்தை எண்ணிப் பார்த்து இனிமேலாவது திருந்த வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.