பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 100 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
பாரதப் பிரதமர் மோடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியையும், அதன் சிறப்புகளையும், தமிழன் பெருமைகளையும், தொடர்ந்து உயர்த்தி பேசி வருகிறார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.
குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாரதப் பிரதமர் மோடி பாரதியாரின் கவிதையை கம்பீரமாக முழங்கியது, அதே போன்று இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும் பொழுது, தமிழில் உள்ள வீரம் மிகுந்த கருத்துக்களை, அவர்கள் மத்தியில் முழங்கியது. என தமிழை தாய் மொழியாக கொண்டிராத, பாரதப் பிரதமர் மோடி தமிழ் மொழிக்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகிறார்.
எந்த விதமான துண்டு சீட்டும் இல்லாமல். திருக்குறள், நாலடியார், பாரதியார் கவிதை, ஒளவையார் பொன்மொழிகளை, மாற்று மொழி பேசும் மக்களிடம் எடுத்து கூறி தமிழ் மொழியின் மேன்மை எடுத்து கூறி வரும் நிலையில். “100 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய இணையமைச்சர் ” – எல்.முருகன் கூறியுள்ளார்.