யோகாவை எடுத்துக்காட்டிய மோடி – ( பகுதி-06 )

யோகாவை எடுத்துக்காட்டிய மோடி – ( பகுதி-06 )

Share it if you like it

யோகாவும் மோடியும்

இந்த புண்ணிய பூமியில் புதைந்திருக்கும் பொக்கிஷம் ஏராளம். அவற்றை தோன்டத்தோன்ட எடுத்தால் பல அறிய பொக்கிஷங்களும், விலைமதிப்பில்லாத, மதிக்கத்தக்க நமது முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற தத்துவங்கள், இலக்கியங்கள், நூல்கள் போன்ற எண்ணற்ற பொக்கிஷங்World yoகளை நமக்கு அள்ளிக்கொடுத்துள்ளனர். ஆயக்கலைகள் 64 என்று கூறுவார்கள். அந்த 64 கலைகளையும் பல சுவடுகளின் வழியாக நமது முன்னோர்கள் கொடுத்துள்ளனர். இதுபோன்ற பொக்கிஷங்கள் பாரதத்தில் நிறைந்துள்ளன.

இந்த பொக்கிஷங்களில் ஒன்றுதான் யோகக் கலை. நமது உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவவும், எண்ணத்தில் இருக்கும் அழுக்கையும், மனதில் இருக்கும் சலனத்தையும் அறவே அழிக்க உதவுவது இந்த யோகக்கலை தான். இதனை முறையாகவும், உண்மையாகவும், பயற்சி எடுத்தால் நாம் இந்த  அற்ப மாயையிலிருந்து விடுபட்டு இறைநிலையை அடையலாம் என்பதை நமது சித்தர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து நமக்கு தெரிவித்துள்ளனர். இந்த யோகக் கலையை நாம் உலகம் முழுவதும் பரப்பி இதன் மூலம் உலகிலுள்ள அனைத்து மக்களும் பயன்பெற வழிவகைச் செய்கின்றனர்.

சர்வதேச யோக தினம்

முதல் முறையாக 2015 ஜுன் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டது. 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த யோக கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோக நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுசபையில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி அன்று  வலியுறுத்தி உரையாற்றி இருந்தார். ஜுன் 21ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார். அமெரிக்க, கனடா, சீனா, உட்பட பல உலக நாடுகள் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஆதரித்தனர். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அன்று 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜுன் 21ஆம் நாளை பன்னாட்டு யோக நாளாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. முதல்முறையாக 2015 ஜுன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்தியத் தலைநகர் டெல்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார்.

நம்முடைய கலாசாரத்தின் முக்கிய அங்கம் யோக என்று குறிப்பிட்ட பாரத பிரதமர் இனி வரும் காலங்களில் யோகா பயிற்சியை அடுத்த கட்டத்துக்கு நாம் அனைவரும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்.

நமது பாரம்பரிய கலையையும், நமது கலாச்சாரத்தையும், உலகம் முழுவதும் பரவச்செய்து நம் பாரத நாட்டை உலகின் தலைசிறந்த நாடாகி உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக திகழசெய்த பெருமைக்குரியவர் பாரத பிரதமர் நரேந்திர மோடியே சேரும்.

 

 

 


Share it if you like it