சீனாவின் சூழ்ச்சிக்கு மோடி அரசு வைத்த செக்.
முந்தைய காங்கிரஸ் அரசு போல சீனாவிற்கு அடிமையான அரசாக பா.ஜ.க இல்லை. இதன் காரணமாக, பல சூழ்ச்சி திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முடியாமல் அந்நாடு இன்று வரை திணறி வருகிறது. இதற்கு, பாரதப் பிரதமர் மோடி தான் காரணம் என சீனா கருதுகிறது. ஆகவே, இந்தியாவின் வளர்ச்சிக்கு எந்த அளவிற்கு குடைச்சல், கொடுக்க முடியுமோ? அனைத்தையும் சீனா மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீனா நுழைந்து அடாவடி செயலில் ஈடுபட்டது. இதற்கு, எல்லாம் அஞ்சாமல் மோடி அரசு தற்பொழுது சீனாவிற்கே பெரும் குடைச்சலை கொடுத்து வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம், கொடுத்த மரண பதிலடியை குறிப்பிட்டு சொல்லலாம். இது குறித்து, இந்தியாவின் முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத் கூறியதாதவது;
கல்வான் தாக்குதல் மற்றும் லடாக் முற்றுகைகளுக்கு பிறகு சீன ராணுவத்திற்கு இந்தியாவுடன் மோதுவதற்கு போதிய அனுபவம் போதவில்லை இன்னும் நிறைய பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கிண்டல் செய்து இருந்தார். இது பழைய பாரதம் அல்ல புதிய பாரதம் என்பதை சீனாவிற்கு உணர்த்துவது போல அவரது பேச்சு அமைந்து இருந்தது.
இந்த நிலையில் தான், சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து, இந்திய எல்லைகளை பாதுகாக்கும் பொருட்டு, மத்திய அரசு ரஷ்யாவிடம் இருந்து 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து எஸ் 400 தடுப்பு ஏவுகணைகளை வாங்க ஓப்பந்தம் செய்து இருந்தது. ஆனால், ரஷ்யாவின் மீது அமெரிக்கா திடீரென பொருளாதார தடை விதித்தது. ஆகவே, அமெரிக்காவையும் பகைத்துக் கொள்ளாமல், ரஷ்யாவின் நட்பையும் விட்டுக் கொடுக்காமல் தடுப்பு ஏவுகணையை எப்படி? மோடி அரசால் வாங்க முடியும் என உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வந்தது.
காங்கிரஸ் அரசாக இருந்தால் அமெரிக்காவின் மிரட்டலுக்கும், சீனாவின் அத்தூ மீறலுக்கும் என்றோ அடிபணிந்து இருக்கும். தற்பொழுது, பாரதம் மோடியின் கைகளில் இருப்பதால் தடுப்பு ஏவுகணைகளை இந்தியா வாங்கி கொள்வதற்கு தடை இல்லை என அமெரிக்க அறிவித்து இருக்கிறது. இதுதான், தற்பொழுது உலக நாடுகள் மத்தியில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இது, பாரதப் பிரதமர் மோடி மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.