குடியரசு அணிவகுப்பு…வி.வி.ஐ.பி.களுக்கு முதல் வரிசை இல்லை…பிரதமர் செய்த தரமான சம்பவம்!

குடியரசு அணிவகுப்பு…வி.வி.ஐ.பி.களுக்கு முதல் வரிசை இல்லை…பிரதமர் செய்த தரமான சம்பவம்!

Share it if you like it

குடியரசு அணிவகுப்பில் முதல் வரிசை வி.வி.ஐ.பி.களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இம்முறை அதில் மாற்றம் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பாரத தேசத்தின் 74-வது குடியரசு தினவிழா வருகிற ஜனவரி 26 – ஆம் தேதி வர உள்ளது. அந்த வகையில், நாடு முழுவதும் உற்சாகத்துடனும், கோலாகலமாகவும் இந்த விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான, ஏற்பாடுகள் மிக தீவிரமாக டெல்லியில் நடைபெற்ற வருகிறது. குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார். அதன்பின்னர், தேசத்தின் ராணுவ வலிமை, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மத்திய மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கும் விதமாக பல்வேறு அலங்கார ஊர்திகள் அணிவகுக்க உள்ளன.

இந்த அணி வகுப்பு விழாவை காண வெளிநாட்டு தூதுவர்கள், தொழிலதிபர்கள், மூத்த அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொள்வர். இதில், வி.வி.ஜ.பி.களுக்கு மட்டுமே முதல்வரிசை ஒதுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், அந்த நடைமுறையை பாரதப் பிரதமர் மோடி அரசு அதிரடியாக மாற்றி இருக்கிறது.

அதாவது, இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பு விழாவில் வி.வி.ஐ.பி.களுக்கு முதல் வரிசை இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு மாறாக, அந்த வரிசையை புதிய நாடாளுமன்ற வளாகம், கடமை பாதை உள்ளிட்டவற்றை கட்டிய மற்றும் புனரமைத்த கட்டிட தொழிலாளர்களுக்கும், ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் காய்கறி வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு மட்டுமே அந்த முதல் வரிசை ஒதுக்கீடு செய்யப்படும் என மோடி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுதான் சமத்துவம், சமூக நீதி இதுபோன்ற சம்பவங்களை பா.ஜ.க. மட்டுமே செய்ய முடியும். கொத்தடிமை கட்சிகளிடம் இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்பார்க்க முடியாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


Share it if you like it