ராகுலுக்கு நெருக்கடி   கொடுக்க பா.ஜ.க. அதிரடி திட்டம்!

ராகுலுக்கு நெருக்கடி கொடுக்க பா.ஜ.க. அதிரடி திட்டம்!

Share it if you like it

வீர சாவர்க்கரை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ.க. அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி வீர சாவர்க்கர். இவர், சிறையில் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். எனினும், இவர் மீது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து அவதூறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், பாரதப் பிரதமர் மீது உள்ள வன்மத்தால் ’மோடி’ சமூகத்தை வயநாடு எம்.பி. ராகுல் காந்தி மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

அந்த வகையில், ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி, குஜராத் மாநிலத்தை சேர்ந்த சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதித்தது. இப்படிப்பட்ட சூழலில் தான், “நான் சிறைக்கு சென்றாலும் செல்வேனே தவிர சாவர்க்கர் மாதிரி மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்து மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் புயலை கிளப்பி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் தான், ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:

பா.ஜ.க.வின் சாதாரண தொண்டருக்கு கூட சாவர்க்கரின் வீர வரலாறும் அந்தமான் சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகளும் தெரியும். அப்படிப்பட்டவரை ராகுல் தொடர்ந்து அவமதித்து வருகிறார். சாவர்க்கரின் தியாகம் குறித்து மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரசார இயக்கத்தை நடத்த பா.ஜ.க. தலைமை திட்டமிட்டுள்ளது. இதை ஏற்கனவே மகாராஷ்டிரா பா.ஜ.க. துங்கியுள்ளது.

சமூக ஊடக பக்கங்களில் சாவர்க்கர் படத்தை முகப்பு படமாக வைப்பது அவர் பற்றிய கருத்தரங்குகள் கூட்டங்கள் நடத்துதல் சாவர்க்கர் எழுதிய நூல்களையும் அவரை பற்றி எழுப்பட்ட நூல்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சாவர்க்கர் பற்றி பேச்சு போட்டி, கட்டுரை, கவிதை, குறும்பட போட்டிகள் நடத்துவது சாவர்க்கர் எழுதிய புத்தகங்கள் குறித்து விமர்சன கூட்டங்கள் நடத்துவது என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்


Share it if you like it