காமராஜர் குறித்து பிரதமர் ட்வீட்!

காமராஜர் குறித்து பிரதமர் ட்வீட்!

Share it if you like it

கல்விக்கண் திறந்த காமராஜர் குறித்து பாரதப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் தெரிவித்து இருக்கிறார்.

மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட, குறை கூற முடியாத அளவிற்கு நேர்மையுடன் வாழ்ந்தவர் காமராஜர். இவர், தனது குடும்பம் பற்றி துளியும் கவலைப்படாமல், தமிழர்களின் எதிர்கலாம் குறித்து அதிகம் சிந்தித்தவர். தமிழகத்தையும், தாண்டி ஒட்டு மொத்த இந்திய அரசியல்வாதிகளுக்கும் தாம் ஒரு சிறந்த உதாரணமாக இன்று வரை திகழ்ந்து வருகிறார்.

பெருந் தலைவர் என்று தமிழக மக்கள் இவரை இன்று வரை அன்போடு அழைத்து வருகின்றனர். இவர், ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காக ஆற்றிய பணிகள் ஏராளம். இது தவிர, இவர் முதல்வராக இருந்த கால கட்டம் பொற்காலம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த அளவிற்கு, நேர்மையான ஆட்சியை தமிழக மக்களுக்கு கொடுத்தவர். ஓட்டு, அரசியலை கருத்தில் கொள்ளாமல் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்து மக்களின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்.

மேலும், மின்சார உற்பத்தி, தடுப்பு அணைகள், இயற்கை வளங்களை பாதுகாத்தல் என, பல வியத்தகு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர். இப்படியாக, இவர் செய்த சாதனைகள் ஏராளம். இதனிடையே, கர்நாடக மாநில சட்ட சபையில், பட்ஜெட் மீதான விவாதம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்பொழுது, பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜீவ் என்பவர் காமராஜரின் மக்கள் சேவை பற்றியும் அவரது தியாகங்கள் குறித்தும் புகழாரம் சூட்டி இருந்தார். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, குறித்தும் தமிழ் மொழியின் மேன்மைகள் பற்றியும் பாரதப் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் தான், பாரதப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர்.


Share it if you like it