பிரதமரிடம் கோரிக்கை வைத்த சிறுமியின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளை போன்று இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இருந்து வருகிறது. அந்த வகையில், மிக நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தாலும், இரு நாடுகளுக்கு மத்தியில் முறையான கடல் எல்லைகள் வரையறை செய்யப்படவில்லை. இதனால், இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்கும் சூழல் இயற்கையாகவே அமைந்து விடுகிறது. அந்த வகையில், இரு நாட்டு ராணுவமும் எல்லை தாண்டி செல்லும் மீனவர்களை கைது செய்யும் நிலை உருவாகி விடுகின்றன.
இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த, மீனவர் கலைவாணன் கார்த்திக் என்பவரை இலங்கை நாடு கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறது. அந்த வகையில், தனது மாமாவை மீட்டு தாருங்கள் ’மோடி தாத்தா’ என மீனவர் குடும்பத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் உருக்கமாக பிரதமருக்கு கோரிக்கை வைத்த காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுமி கூறியதாவது:
’மோடி தாத்தா’ எங்க மாமா ரொம்ப கஷ்டபடுகிறது. அவரை, நீங்க தான் காப்பாற்ற வேண்டும். அவர், இல்லாமல் நாங்க ரொம்ப தவித்து வருகிறோம். எனக்கு, எங்க மாமா நினைப்பாவே இருக்கு. நீங்க தான் எங்க மாமாவையும், அவருடைய படகையும் மீட்டு தர வேண்டும். எங்க மாமா இல்லாமல் எங்களால், வாழவே முடியாது மோடி தாத்தா என உருக்கமாக அந்த சிறுமி பேசி இருக்கிறது.