குஜராத் கலவரம் குறித்து உண்மைக்கு புறம்பாக பி.பி.சி. வெளியிட்ட காணொளிக்கு அந்நாட்டு எம்.பி. தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
2014 – ஆம் ஆண்டு பாரதப் பிரதமராக மோடி பதவியேற்றார். இவர், பொறுப்புக்கு வந்தபின்பு இந்தியாவின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் முன்னேறி வருகிறது. இதனை, கண்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன. அதேபோல, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட சில நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காமல் பிரதமர் மோடி மீது தங்களது வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் பொருட்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல ஊடகமான பி.பி.சி. மோடி குறித்து அவதூறு செய்தியை அண்மையில் வெளியிட்டு இருந்தது. அதாவது, 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இதில், 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஹிந்து மற்றும் முஸ்லீம்களுக்குமிடையில் கலவரம் ஏற்பட்டது. இதில், பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படனர். இந்த கலவரத்தை தடுக்காமல் அப்போதைய முதல்வர் மோடி மெளனமாக இருந்ததாக பி.பி.சி. அவதூறு செய்தியை பரப்பி இருந்தன.
பி.பி.சி.யின் உண்மைக்கு புறம்பான இந்த செய்திக்கு அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில் தான், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எம்.பி. பிளாக் மேன் இவ்வாறு கூறியிருக்கிறார் ;
குஜராத்தில் 2002 – ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின்போது, அப்போதைய முதல்வர் மோடி அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்தார். பி.பி.சியின் ஆவணப்படம் மிகவும் கவலைக்குறியது. இந்த நிகழ்ச்சி நிரல் இங்கிலாந்து- இந்திய உறவை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இது பெரிய அவமானம்.
பி.பி.சியின் ஆவணப்படம் புனைவுகள் நிறைந்தது. இந்த காணொளி பி.பி.சி. மேற்பார்வையில் வெளிப்புற அமைப்பால் தயாரிக்கப்பட்டது என இங்கிலாந்து எம்.பி. பிளாக்மேன் கூறியிருக்கிறார்.