இந்திய பிரதமர் மோடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரபல சாகச வீரர் பியர் கிரில்ஸ் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பிரபல எழுத்தாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் மற்றும் தொழிலதிபராக இருப்பவர் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பியர் கிரில்ஸ். இவருக்கு, உலகம் முழுவதும் கோடிகணக்கான ரசிகர்கள் உண்டு. ‘வெயில் புகாத அமேசான் மழைக் காடுகள், சுட்டெரிக்கும் சஹாரா பாலைவனம், ஆளையே கொல்லும் ஆர்டிக் பனிப்பிரதேசம் மற்றும் ஆபத்து நிறைந்த பசுபிக் தீவுகள் என அனைத்து இடங்களுக்கும் சென்று எப்படி? உயிர் பிழைக்க முடியும் என்று உலக மக்களுக்கு நிருபித்து காட்டியவர்.
யாரும் செல்லாத இடங்களுக்கு செல்வது. பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் டைவ் அடிப்பது. விலங்குகளை எப்படி? வேட்டையாடுவது என இவர் கற்று தரும் யுக்திகள் மிக பிரபலம். அந்தவகையில், உலக புகழ் பெற்ற சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், உலக தலைவர்களுடன் அடர்ந்து காடுகளுக்கு செல்வார். இதனை தொடர்ந்து, அங்கிருந்து எப்படி? வெளியேறுவது என அவர்களுக்கு பியர் கிரில்ஸ் கற்று தருவார். இதனை, பிரபல ஊடகமான டிஸ்கவரி காணொளியாக பதிவு செய்து தனது சேனலில் வெளியிடும்.
அந்த வகையில், கடந்த 2019- ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் பியர் கிரில்ஸின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாரதப் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த வகையில், மூன்று ஆண்டுகள் கழித்து பிரதமருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பியர் கிரில்ஸ் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.