மாற்றுத் திறனாளியின் ஆசையை நிறைவேற்றிய பிரதமர் மோடி!

மாற்றுத் திறனாளியின் ஆசையை நிறைவேற்றிய பிரதமர் மோடி!

Share it if you like it

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியின் விருப்பதை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் மோடிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அசாம் மாநிலத்தின் சில்சர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் கோதானி (28). இவர், பிறவியிலேயே வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத மாற்றுத் திறனாளி ஆவார். இவரால், பேச முடியாவிட்டாலும் இவரின் ஓவியங்கள் குறித்து, அனைவரும் பேசும் வகையில் தனது திறமையை இந்த உலகிற்கு காட்டி வருகிறார்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிஜித், தனது பெற்றோருடன் சென்று அஸ்ஸாம் முதல்வரை சந்தித்து இருக்கிறார். இதையடுத்து, தான் வரைந்த ஓவியத்தை முதல்வருக்கு அவர் பரிசாக வழங்கினார். அப்போது, பிரதமர் மோடியை தான் சந்திக்க விரும்புவதாக தனது ஆசையை முதல்வரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை தொடர்ந்து, பிஸ்வா சர்மா பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் இருக்கிறார். அதனை தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தில் இருந்து உடனே கிரீன் சிக்னல் கிடைத்து இருக்கிறது. இதையடுத்து, அபிஜித் தனது தாயார் மற்றும் அஸ்ஸாம் முதல்வர் உடன் டெல்லி சென்று மோடியை சந்தித்து இருக்கிறார்.

இதையடுத்து, அபிஜித் சைகையில் கூறியதை அவரது தாயார் விளக்கி கூறியதாதவது; பிரதமரை தினமும் நான் டி.வி.யில் பார்ப்பேன். இன்று நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது, ஓவியத்தை வெகுவாக பாராட்டினார். அவரின், பேச்சு எனக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. எனது முதுகை தட்டிக் கொடுத்து எனது ஓவியம் சிறப்பாக உள்ளதாக கூறினார். இன்று எனது கனவு நிறைவேறி இருக்கிறது. பிரதமர் மோடி மென்மையான இதயம் கொண்ட மனிதர். அவரை, நான் சந்தித்ததை நினைத்து எனது குடும்பத்தினர் பெருமைப்படுவார்கள். என்னை போன்றவர்கள், அனைத்தையும் இழந்துவிட்டதாக நினைக்கக் கூடாது. நம்மாலும் சாதிக்க முடியம் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.


Share it if you like it