இந்தியாவின் புகழ் பெற்ற பிரபல ஜோதிடர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத் குமார் மிஸ்ரா. இவர், கணித்து கூறும் பலன்கள் துல்லியமாக இருக்கும் என்பது அனைவரின் கருத்து. அந்தவகையில், பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் கூட இவரது கணிப்பை மிக உறுதியாக நம்புவர். அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணி நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் காலத்திலேயே நடக்கும் என கணித்து இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், 2029 நவம்பர் (அல்லது) டிசம்பரில் இந்தியா ஒரு இந்து நாடாக அறிவிக்கப்படும். அரசியலமைப்பில், புதிய சட்டங்கள் சேர்க்கப்படும், இதன்மூலம் இந்தியா இந்துக் குடியரசாக மாறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பிரதமர் மோடி ஆரோக்கியமாக இருப்பார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அவர் தான் பிரதமராக இருப்பார் என கணித்துள்ளார். அதேபோல, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமராக இருக்கும் போது பாகிஸ்தான் எனும் நாடு இருக்காது. அது, இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியிருக்கும் என கணித்துள்ளார்.