நீங்கள் இந்தியாவின் பெருமை!

நீங்கள் இந்தியாவின் பெருமை!

Share it if you like it

நீங்கள் இந்தியாவின் பெருமை என சானியா மிர்சாவை பாரதப் பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, பிரதமர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ; இந்திய விளையாட்டில் அழியாத முத்திரையை நீங்கள் பதித்துள்ளீர்கள். இது அடுத்த தலைமுறை வீரர்களுக்கு இது உத்வேகம் அளிக்கும். உங்களின் சிறப்பான ஆட்டத்தால், இந்தியாவின் விளையாட்டுத் திறமையை உலகமே பார்த்தது. நீங்கள் விளையாடத் தொடங்கியபோது, இந்தியாவின் டென்னிஸ் நிலப்பரப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனால், நீங்கள் விளையாடிய விதம் பெண்கள் பலர் டென்னிஸ் விளையாட்டை விளையாடலாம், அதில் சிறந்து விளங்கலாம் என்பதை உணர்த்தியது.

6 வயதில் தொடங்கிய உங்கள் டென்னிஸ் பயணத்தை அற்புதமாக கூறியிருந்தீர்கள். டென்னிஸ் கோர்ட்டுக்கு செல்ல போராடியதில் இருந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகத்தரம் வாய்ந்த வீராங்கனையாக உருவெடுத்த வரையிலான பயணத்தை அற்புதமாக கூறினீர்கள். இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்.

நீங்கள் இந்தியாவின் பெருமை என்று என்னால் கூற முடியும். உங்கள் வெற்றி ஒவ்வொரு இந்தியனின் இதயங்களையும், மனதையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் நிரப்பி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடித்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சானியா மிர்சா, “இதுபோன்ற அன்பான மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் எப்போதும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் இந்தியாவைப் பெருமைப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.


Share it if you like it