பாரதப் பிரதமர் மோடி வாஞ்சிநாதன் பெருமை குறித்து, மன்கீ பாத் உரையில் சுட்டிக்காட்டி பேசி இருப்பதை தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதப் பிரதமர் மோடி மனதின் குரல் (மன்கீ பாத்) என்னும் நிகழ்ச்சியின் மூலம் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடம் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். அந்த வகையில், தேசம் மற்றும் சமூகத்திற்கு தங்களால் இயன்ற சேவைகளை செய்து வரும் நன்மக்களை அடையாளம் கண்டு உலகம் அறிய செய்வதை தனது கொள்கையாக கொண்டவர் பாரதப் பிரதமர் மோடி. அந்த வகையில்.,
இந்திய விடுதலைக்காக போராடிய தமிழகத்தை சேர்ந்த வாஞ்சிநாதன் குறித்து தனது மன்கீ பாத் உரையில் பிரதமர் கூறியதாவது; பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்கு இளைஞர் வாஞ்சிநாதன் தண்டனை வழங்கிய இடம் மணியாச்சி அடிமை தளத்தில் இருந்து விடுதலை அடைந்திட துடிக்கும் தவிப்பு எத்தனை பெரியதாக இருந்திருக்கும்? வருங்கால சந்ததிகளின் பொருட்டு நாமும் நமது வாழ்வை அர்ப்பணிப்போம் என குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் மாறா அன்பு கொண்டவர் பாரதப் பிரதமர் மோடி. ’ஏர் முனையில் தொடங்கி போர்முனை’ வரை தமிழ் மொழியை கொண்டு சென்று பெருமை சேர்த்தவர். ஐ.நா.,வில் தொடங்கி சைனா வரை, சிறிய நாடுகளில் தொடங்கி பெரிய நாடுகள் வரை தமிழ் மொழியை உலகம் முழுவதும் கடத்திய தமிழ் சித்தர் பிரதமர் மோடி என்று கூறினால் அது மிகையாகாது.
இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தாயம்மாள் என்பவரின் சேவையை மன்கீ பாத் மூலம் அண்மையில் உலகம் அறிய செய்து இருந்தார். இதுபோல, எண்ணற்ற தமிழர்களை உலகத்திற்கு பாரதப் பிரதமர் மோடி அடையாளம் காட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.