பாரதப் பிரதமர் வெளியிட்ட வாழ்த்து செய்தி!

பாரதப் பிரதமர் வெளியிட்ட வாழ்த்து செய்தி!

Share it if you like it

போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவ மக்களின் மதகுருவாக பார்க்கப்படுபவர் போப் பிரான்சிஸ் – 86. இவருக்கு, மூச்சுக்குழாயில் ஏற்பட்ட தொற்று காரணமாக அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அந்த வகையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் முன்னேற்றம் இருப்பதாகவும், வெகுவிரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பலாம் என வாட்டிகன் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பாரதப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”போப் பிரான்சிஸ் விரைவாக குணமடையவும் நல்ல ஆரோக்கியத்தைப் பெறவும் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.


Share it if you like it